பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம்: தமிழக அரசு உத்தரவு

Added : பிப் 11, 2020
Advertisement

கரூர்: சத்துணவு மையங்களில், காய்கறி தோட்டங்கள் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மதிய சத்துணவு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், ஒரு லட்சத்து, 24 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சத்துணவுக்கு பயன்படுத்தப்படும் காய்கள், தரம் இல்லாமல் இருப்பதாக மாணவ, மாணவியர், பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. இதையடுத்து, சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது: சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என, கடந்த நவம்பர் மாதம் அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்ற, தோட்டக்கலை அலுவலர், பி.டி.ஓ.,க்கள் வேளாண் அலுவலர், விவசாயிகள், பள்ளி மேலாண் குழு, தன்னார் வலர்கள் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகளை, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையிடவும் அரசு உத்தர விட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X