மணல், மண் கடத்தல்: 3 லாரி, பொக்லைன் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல், மண் கடத்தல்: 3 லாரி, பொக்லைன் பறிமுதல்

Added : பிப் 11, 2020
Share

குளித்தலை: தோகைமலை அருகே, மணல் மற்றும் செம்மண் கடத்திய, நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தோகைமலை பகுதியில், மணல் கடத்தல் புகார் குறித்து, நேற்று முன்தினம் இரவு, குளித்தலை தாசில்தார் மகாமுனி தலைமையில், ஆர்.ஐ., மாரியப்பன், வி.ஏ.ஓ., ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆர்ச்சம்பட்டியில், மணல் மற்றும் மண் கடத்திய பொக்லைன், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இவ்வாகனங்களை ஓட்டிவந்த, திருச்சி கல்லுக்குடி ராமநாதன், விராலிமலை புதுப்பட்டி முருகேசனை தோகைமலை போலீசில் ஒப்படைத்தனர். தோகைமலை ஆர்.ஐ., நீதிராஜன் தலைமையிலான அலுவலர்கள், நேற்று முன்தினம் அதிகாலை, வடசேரி சினிமா தியேட்டர், காரணாம்பட்டி பிரிவு சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். செம்மண் கடத்தி வந்த, இரு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர். இதில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மாணிக்கம் பிடிப்பட்டார். மற்றொரு வாகன டிரைவர் ஓடிவிட்டார். வருவாய்த்துறையினர் கொடுத்த புகார்படி, மூன்று டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் மூலம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X