சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் ஏற்றிச் சென்ற டிரைவர் கைது

Added : பிப் 11, 2020
Advertisement

கரூர்: கரூர் அருகே, அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற, லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, ஆண்டாங்கோவில் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாரியில், இரண்டு யூனிட் மணல் அனுமதி இல்லாமல் ஏற்றி வந்த, விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் பகுதியை சேர்ந்த, டிரைவர் தமிழ் செல்வன், 28, என்பவரை கைது செய்தனர். இதையறிந்த, மணல் கடத்தலுக்கு உதவிபுரிந்த, ஆண்டாங் கோவில் பகுதியை சேர்ந்த இளங்கதிர், 35, தலைமறைவானார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X