பொது செய்தி

தமிழ்நாடு

டீத்தூள் வாங்குவது கட்டாயம்: ரேஷன் நுகர்வோர் புகார்

Added : பிப் 11, 2020
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சுற்றுவட்டார ரேஷன் கடைகளில், டீத்தூள் வாங்க கட்டாயப்படுத்துவதால் ரேஷன் நுகர்வோர் அவதிப்படுகின்றனர்.
திருச்செங்கோடு, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக, தாலுகா அளவில் அதிக இடங்களில் ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி, சர்க்கரை வாங்கச் செல்லும் நுகர்வோரிடம், 'டீத்தூள் வாங்கினால் தான் அரிசி,சர்க்கரை போடப்படும்' என, விற்பனையாளர்கள் சொல்கின்றனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: ரேஷன் கார்டில் அரிசி வாங்கும் போது, டீத்தூள் வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். வேறு பொருட்களை வாங்கிக் கொள்கிறோம் என்றாலும் அரிசி போடுவதில்லை. சர்க்கரை வியாதி காரணமாக நாங்கள் டீ குடிப்பதே இல்லை. எந்த அதிகாரிகளிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவியுங்கள் என, பில் போடுபவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறுகையில், 'தமிழக அரசின் டீத்தூள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அரிசி வாங்குகிற போது டீத்தூள் வாங்க வேண்டுமென தெரிவித்து, விற்பனை செய்கிறோம்,' என்றனர். ரேஷன் கடைகளில் டீத்தூள் வாங்குவதை கட்டாயப்படுத்தாமல் இருக்க, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X