பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 18, 22ல் வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 11, 2020
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு மூலம், 8ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை படித்து, வேலையற்ற, 18 முதல், 35 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும், வேலை வாய்ப்பு முகாம், பிப்., 18ல், திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 22ல், பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடக்கிறது. காலை, 9:00 முதல், மாலை, 3:00 வரை நடக்கும் முகாமில், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள, வேலை தேடும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண் அலகு, கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், நாமக்கல், 04286 281131 என்ற முகவரியில், தங்களது நிறுவன பெயரை, பிப். 10க்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X