பொது செய்தி

தமிழ்நாடு

ஹயக்ரீவர் லட்சார்ச்சனை நிறைவு: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Added : பிப் 11, 2020
Advertisement

மோகனூர்: பள்ளி மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றி பெற, மோகனூரில் ஹயக்ரீவர் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், சுவாமி, பத்மாவதி தாயாருடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றி யடையவும், தொழில் ஸ்தாபனங்கள் வளர்ச்சி பெறவும், நாட்டில் ஆய கலைகள் யாவும் வளம் பெறவும், இயற்கைச் சீற்றங்கள் தணியவும், பருவமழை காலத்தில் பொழிந்து, நதி நீர் வளம் பெற்று, விவசாயம் மேன்மையடையவும், உலக நன்மைக்காகவும், ஆண்டு தோறும் லட்சார்ச்சனை பெருவிழா நடக்கிறது. இந்தாண்டு விழா, கடந்த, 5ல் துவங்கியது. நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, யாகம், லட்சார்ச்சனை நிறைவு, மாலை, 6:00 மணிக்கு, அனைத்து புண்ணிய காலம், ஒரு சங்கல்பம், ஹயக்ரீவர் சரஸ்வதி சாவித்திரி பெற்று, ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம், அபி ?ஷகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி, சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் திருச்சுற்று வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புஷ்பாஞ்சலி, கூட்டுப் பிரார்த்தனை, தீபாராதனை நடந்தது. பள்ளி மாணவ, மாணவியர், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X