பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு

Added : பிப் 11, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 376 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை, பரிசீலித்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டார். பொது சுகாதாரத்துறை சார்பில், 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் முறைகள் பற்றி விரிவாக செயல் முறை விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது, கலெக்டர் கூறியதாவது: சீனாவில் ஏற்பட்டுள்ள, 'கொரோனா வைரஸ்' தொற்றால், மாவட்டத்தில் யாரும் பாதிக்கவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவிலிருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் வரும் பயணிகள் அனைவரும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் குறித்த விபரங்கள் சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதனடிப்படையில், அவர்கள், தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தொற்று நோய்களுக்கான சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள், சந்தைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு முகாம்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். பொதுமக்களுக்கு, கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X