பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்: மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

Added : பிப் 11, 2020
Advertisement

நாமக்கல்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணிமனை பயிற்சி முகாம், நாமக்கல்லில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் வாழ்த்தினார். மொரீஷியஸ் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். அப்போது, மாவட்டத்தில் உள்ள, 15 மையங்களில், 3,792 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி, அவர்களுக்கு உடல் ரீதியாக எவ்வாறு சிறப்பான கல்வி வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். அதையடுத்து, பேட்டரி ஆப்பரேட்டர் வீல் சேர், குழந்தைகளை அழைத்து வருவதற்கான மொபைல் வேன், ஆடியோ வீஷூவல் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. அவற்றை பெற்றுக்கொண்ட அவர், 'பெரிய நிறுவனங்களிடம், அதற்கான நிதியை பெற்று, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தினசரி வாழ்க்கைக்கும், கல்வி வளர்ச்சிக்கும் தேவையான உதவிகளை செய்துவதாக' உறுதியளித்தார். திருச்சி ஹோலிகிராஸ் கல்வி நிறுவன பேராசிரியர் பிரபாகர் இமானுவேல், பேராசிரியர் புவனேஸ்வரி பேசினர். உதவி திட்ட அலுவலர் குமார், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியண்ணன், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X