பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 11, 2020
Advertisement

முட்புதர்களை அகற்ற கோரிக்கை: ராசிபுரம், தட்டாங்குட்டை ஏரி செல்லும் வழியில் உழவர் சந்தை உள்ளது. சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சந்தையின் ஒரு பகுதியில் புதர் மண்டியுள்ளது. முட்செடிகள், நான்கு அடி உயரம் வரை வளர்ந்துள்ளன. அதிகாலை நேரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் புதர் பக்கம் செல்ல அச்சப்படுகின்றனர். பாம்பு அடிக்கடி இப்பகுதியில் தென்படுவதாக புகார் எழுந்துள்ளது. புதர்களை அகற்ற வேண்டும்.
சந்தை வளாகத்தை புதுப்பிக்க வேண்டும்: குமாரபாளையம், இடைப்பாடி சாலையில் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. மழை வந்தால் சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. சரக்கு வாகனங்கள் சேற்றில் சிக்கி நகர முடியாத நிலை ஏற்படுகிறது. சிமென்ட் தரையாக மாற்ற பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை. சுகாதாரமற்ற சந்தை வளாகத்திற்கு வந்து பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சிமென்ட் தரை அமைத்து தர வேண்டும்.

திறந்தவெளியில் குப்பை குவிப்பு: பள்ளிபாளையம் அடுத்த, ஆர்.எஸ்.வழித்தடத்தில் பெரியகாடு பிரிவு பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பை மூட்டைகளை திறந்தவெளியில் கொட்டுகின்றனர். இது அதிகளவு சேர்ந்தவுடன் தீ வைத்து விடுகின்றனர். புகை மண்டலமாக உள்ளதால், சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் அவதிப்படுகின்றனர். தொடர்ச்சியாக குப்பை கொட்டினால், குப்பை கொட்டும் இடமாக மாறிவிடும்.

விபத்து அதிகரிப்பு; வேகத்தடை தேவை: எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம் பாளையம் சாணார்பாளையத்தில் குடியிருப்புகள் அருகே இருக்கும் சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இதுவரை வேகத்தடை ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, குடியிருப்புகள் அருகே, வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடிகால் வசதி அமைக்கப்படுமா? எலச்சிபாளையம் ஒன்றியம், தொண்டிபட்டி பஞ்., குமரவேலிபாளையத்தில், 150க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இதுவரை வடிகால் அமைக்கப்படவில்லை. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. கொசுக்களின் வசிப்பிடமாக உள்ளதால், பகுதியினருக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X