பொது செய்தி

தமிழ்நாடு

கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் ஆர்.டி.ஓ.,வை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோகனூர் தாலுகா, ராசிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய அன்புராஜ் என்பவர், நீதிமன்ற வழக்கில் உள்ள ஒரு நிலப்பிரிவுக்கு பட்டா மாறுதல் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவரை சேந்தமங்கலம் தாலுகா, தூசூருக்கு, ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் பணியிட மாறுதல் செய்தார். அந்த பட்டா மாறுதலை ரத்து செய்தபோதும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கான இடமாறுதலை ஆர்.டி.ஓ., திரும்ப பெற மறுத்து விட்டதாகவும், இது தொடர்பாக கலெக்டரிடம் முறையிட்டபோதும், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், நாமக்கல் தாலுகா அலுவலகம் முன், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், ஆர்.டி.ஓ.,வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் முருகேசன், வட்ட செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X