பொது செய்தி

தமிழ்நாடு

வங்கியில் சர்வர் பிரச்னை: தொழிலாளர்கள் அவதி

Added : பிப் 11, 2020
Advertisement

ராசிபுரம்: வெண்ணந்தூர் கூட்டுறவு சங்கத்தில் சர்வர் பிரச்னையால் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். வெண்ணந்தூர் டவுன் பஞ்., மட்டுமின்றி சுற்றியுள்ள ஊரட்சிகளிலும் விவசாயத்திற்கு அடுத்து தறிப்பட்டறைதான் அதிக வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக வெண்ணந்தூரில், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை தொடங்கப்பட்டது. இதில், பெரும்பாலான மக்கள் கணக்கு தொடங்கியுள்ளனர். முதியோர் உதவித்தொகை, நெசவு கூலி, பால் பணம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த வங்கியைத் தான் நம்பியுள்ளனர். மேலும், ஒன்றியத்தில் உள்ள அக்கரைப்பட்டி, ஓலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களும் இதன் சர்வரில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வேலைநாட்கள் முழுவதும் இந்த கூட்டுறவு வங்கியில் கூட்டம் அலைமோதும். இந்த வங்கியில், ஐந்து பேர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது, இருவர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சர்வர் பிரச்னை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், வயதானவர்கள் காலை முதல் காத்திருந்து அவர்களுடைய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். பல நாட்கள் மாலை முதல் காத்திருக்க வைத்து விட்டு மறுநாள் வர சொல்லுகின்றனர். சர்வர் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக அதை சரிசெய்தால், பொதுமக்களுக்கு பிரச்னை இல்லாமல் இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X