சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமாரபாளையம் அருகே இரு இடங்களில் தீ விபத்து

Added : பிப் 11, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, இரு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. குமாரபாளையம் அடுத்த, ஆனங்கூர் சாலை, எஸ்.பி.கே., நகர் என்ற பகுதியில் இரண்டு ஏக்கரில் ஆள் உயர புற்கள் முளைத்துள்ளன. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம் என்பதால் பல குடிமகன்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிகரெட்டை அணைக்காமல் போட்டு விடுவதால், காய்ந்த புற்களில் தீப்பிடித்து அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த, இரு மாதங்களுக்கு முன், இங்கு தீ விபத்து ஏற்பட்டு பெருமளவிலான புற்கள் தீயில் எரிந்தன. அப்போதே மீதமுள்ள புற்களை பொக்லைன் கொண்டு அகற்ற பொதுமக்களால் கோரிக்கை விடப்பட்டும் பலனில்லை. இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணியளவில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு ஒன்றரை ஏக்கரில், தீ கொழுந்து விட்டு எரிந்தது. குமாரபாளையம் தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். * குமாரபாளையம் அருகே, ரங்கனூர் நான்கு ரோடு அருகே சில்லாம்பாறையைச் சேர்ந்தவர் சின்னுசாமி, 45; விவசாயி. நேற்று மாலை, 4:20 மணியளவில் இவர் தன் விவசாய நிலத்தில் இருந்து டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது வழியில் இருந்த உயர் மின் அழுத்த மின் கம்பியில் வைக்கோற்போர் உரசியதால் தீப்பிடித்தது. இதைக் கண்ட சின்னுசாமி, வைக்கோற்போரை அங்கேயே கொட்டினார். மற்றொரு டிராக்டரில் இருந்த, வைக்கோற்போரை சற்று தள்ளி கொட்டினார். தீயில் எரிந்து கொண்டிருந்த வைக்கோற்போர், அருகிலேயே கொட்டப்பட்ட வைக்கோற்போரிலும் பரவியது. குமாரபாளையம் தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X