சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நெக்' அலுவலகத்துக்கு பூட்டு: 12 பேர் மீது வழக்குப் பதிவு

Added : பிப் 11, 2020
Advertisement

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை (நெக்) பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட கோழிப்பண்ணையாளர்கள், 12 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, நாமக்கல் மண்டலம், தினமும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதாகவும், அதனால், பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறி, 100க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள், கடந்த, 6ல், நாமக்கல்லில் உள்ள, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், நாமம் வரைந்து கையில் எடுத்து வந்திருந்த முட்டையுடன், 'நெக்'கிற்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, அலுவலகத்தை இழுத்து பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்துக்கு, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக, நாமக்கல் மண்டல உதவி பொது மேலாளர் பாலசுப்ரமணியம், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், அலுவலகத்தை பூட்டி பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், நாமக்கல் மண்டல குழு உறுப்பினர் நாகராஜ், வசந்தராஜ், கோவிந்தராஜ், வெங்கடாசலம், வேலுசாமி, குப்புசாமி, ஆனந்த், சசிக்குமார், சரவணன், நடேசன், சின்னதுரை, தினேஷ் ஆகிய, 12 பேர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X