சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல்: மோகனூர் வாலிபர் கைது

Added : பிப் 11, 2020
Advertisement

மோகனூர்: மோகனூர் அருகே, வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். மோகனூர் அடுத்த, ஒருவந்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சரவணகுமார், 23. அவரது தங்கை, மோகனூர் அரசு மகளிர் மாதிரி பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், ஒருவந்தூரை சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேசன், 19, சரவணகுமார் தங்கையிடம், அவரது தாயார் மொபைல் எண்ணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து, மாணவி, தன் அண்ணனிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து, வெங்கடேசனிடம் அவர் தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்தவர், சரவணக்குமாரை தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக, மோகனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X