தாறுமாறு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல்| Dinamalar

தாறுமாறு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல்

Added : பிப் 11, 2020
Share

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், நான்கு சாலை சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை, சேலம், சங்ககிரி, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, திருச்சி மற்றும் பல முக்கிய பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், பள்ளிபாளையம் நான்கு சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும். இங்கு வாகன போக்குவரத்து அதிகம். வாகனங்கள் சீராக செல்லவில்லையெனில், போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். ஆம்புலன்ஸ் வந்தால் தொடர்ந்து செல்வதே சிரம்மதான். காலை, மாலை நேரங்களில், போக்கு வரத்தை சீரமைக்க போலீசார் நிற்கின்றனர். போலீசார் இல்லாத நேரங்களில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், நெரிசல் ஏற்படுகிறது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். டூ வீலரில் வந்தவர்கள், சிறிய சிறிய இடைவெளி வழியாக சென்றனர். எனவே, இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X