அடிப்படை வசதிகள் இல்லாததால் திருநகர் பொதுமக்கள் தவிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

நாமக்கல்: அடிப்படை வசதிகள் இல்லாததால், நல்லிபாளையம் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், நல்லிபாளையம் உள்ளது. அது, நகராட்சி நிர்வாகத்துக்குட்பட்ட, 7வது வார்டு. 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள கருப்பணார் கோவில் தெரு, திருநகரில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், மின்சாரக் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள ஒயர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் தொங்கியவாறு உள்ளன. அது, பெரியவர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. அதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். மேலும், அங்கு சாலை, குடிநீர், சாக்கடை அமைக்கப்படாமல் உள்ளது. அதனால், மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து மின் கம்பங்களிலும் விளக்குகளும் பொருத்தப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், நல்லிபாளையம் திருநகர் பகுதியில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X