பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம்: 263 மனுக்கள் அளிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 263 மனுக்கள் அளிக்கப்பட்டன. பின், சர்வதேச அளவிலான பேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன், வெல்டிங் முதலிய திறன் போட்டிகள், 2021 ஆண்டில் ஷாங்காய் மாநகரத்தில் நடக்கிறது. கரூர் மாவட்டத்தில், 434 நபர்கள் விண்ணப்பித்து முதல்நிலைத் தேர்வில், 25 நபர்கள் தேர்வாகி அவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X