பொது செய்தி

தமிழ்நாடு

நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை ஏற்றம்

Added : பிப் 11, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை, ஒரே நாளில், 25 காசு அதிகரித்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த, 1ல், 360 காசாக விலை நிர்ணயிக்கப்பட்டது. 3ல், 10காசு, 4ல், 15 காசு என, இரண்டு நாளில், கொள்முதல் விலை, 25 காசு குறைக்கப்பட்டது. 8ல், ஐந்து காசு, நேற்று முன்தினம் ஐந்து காசு என, 10 காசு அதிகரித்து, 345 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று, மேலும், 25 காசு உயர்த்தப்பட்டு, 370 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: ஐதராபாத் உள்ளிட்ட வெளி மண்டலங்களில், கொள்முதல் குறைக்கப்பட்டதால், நாமக்கல் மண்டலத்திலும், அதன் விலையை குறைக்கும் நிலைக்கு, பண்ணையாளர்கள் தள்ளப்பட்டனர். அதனால், நுகர்வு அதிகரித்தது. தற்போது, ஐதராபாத் மண்டலத்தில், கொள்முதல் விலையை, 25 காசு உயர்த்தி உள்ளனர். நாமக்கல் மண்டலத்திலும், 25 காசு அதிகரித்துள்ளது. வெளி மண்டலத்தில் நிர்ணயிக்கும் விலையை அனுசரித்தே, நாமக்கல் மண்டலத்தில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X