டில்லியில் தோல்வி: காங்., நிர்வாகிகள் அதிருப்தி

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (22)
Advertisement
DelhiPolls2020, DelhiResults, DelhiElectionResults, DelhiElection2020, congress,cong, டில்லிதேர்தல், காங்கிரஸ், காங்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கட்சி மேலிடம் விரைவாக முடிவு எடுக்காதது, சில முக்கிய நிர்வாகிகளின் சரியில்லாத செயல்பாடுகளே டில்லியில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணம் என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக டில்லி காங்., தலைவர் சுபாஷ் சோப்ரா கூறுகையில், டில்லியில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டிற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். மோசமான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராயப்படும். ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சிகள் பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டதால், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்துவிட்டது என்றார்.
டில்லி மாநில மகளிர் காங்., தலைவி கூறுகையில், காங்கிரஸ் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சி மேலிடம் முடிவு எடுப்பதில் தாமதம், சரியாக திட்டமிடாதது, மாநில அளவில் ஒற்றுமை இல்லாதது, உற்சாகமில்லாத தொண்டர்கள், அடிமட்ட தொண்டர்களுடன் மேலிடத்துடன் தொடர்பு இல்லாதவை காரணமாக தோல்வியை சந்தித்தோம். எனது பொறுப்பையும் ஏற்று கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான சந்தீப் தீக்சித் கூறுகையில், காங்கிரஸ் மோசமாக தான் செயல்படும் என எதிர்பார்த்தேன். இது கடந்த செப்டம்பர் மாதம் முதலே தெரியும். டில்லி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்தவில்லை. மாநில தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களில் சிலர் தான் கட்சியின் மோசமான தோல்விக்கு காரணம் என்றார்.

ம.பி., முதல்வர் கமல்நாத் கூறுகையில், எங்களுக்கு கிடைக்கும் முடிவு குறித்து முன்னரே தெரியும். பெரிய வாக்குறுதி அளித்த பா.ஜ.,வுக்கு என்ன ஆனது என்பதே தற்போதைய கேள்வி என்றார்.

லோக்சபா காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பா.ஜ., அல்லது ஆம் ஆத்மியை தான் தேர்வு செய்வோம் என்பதில் மக்கள் கவனமாக உள்ளனர். வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற, ஒட்டுமொத்த மத்திய அரசு இயந்திரமும் களமிறங்கியது. பிரதமர் முதல்வர் அடிமட்ட பா.ஜ., தொண்டர்கள் வரை களத்ததில் இறக்கப்பட்டனர். காங்கிரஸ் தோல்வி என்பது நல்ல செய்தி அல்ல என தெரிவித்தார்.

ராஜ்யசபா எம்.பி., அபிஷேக் சிங்வி கூறுகையில், டில்லி தேர்தலில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறந்த பணிக்காக ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஷீலாவிற்கு மாற்று நபரை காங்கிரஸ் கண்டுபிடித்து, 3 அல்லது 4 ஆண்டுகள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
11-பிப்-202023:01:12 IST Report Abuse
sankar பப்பு தூக்கிட்டு போபியா தலைவராகுங்க . அடுத்த தேர்தலில் பாபியை தூக்கிட்டு சோனிவ போடுங்க அப்புறம் பப்பு ,பாபி சோனி ,பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி பப்பு ,பாபி சோனி இப்படியே musical கரி விளையாதூங்க
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
11-பிப்-202022:34:42 IST Report Abuse
Aarkay வெற்றிக்கு முழுக்காரணம் இத்தாலி பேக்கரி குடும்பம் மீது மக்களுக்குள்ள வெறுப்பே கான்+க்ராஸ் கட்சி மீண்டு வரவேண்டுமென்றால், அந்தக்குடும்பத்தை நிராகரித்து, தகுதியுள்ள, அனுபவமுள்ள, ஊழல் கறைபடியாத ஒருவர் தலைமை ஏற்கவேண்டும். கஷ்டம்தான் நடக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
11-பிப்-202019:55:28 IST Report Abuse
Nallappan Kannan Nallappan Pradeesh பார்த்தசாரதி - மூளை இந்த ஒன்னு இருக்கா மக்கா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X