நாட்டிற்கு கிடைத்த வெற்றி: கெஜ்ரிவால்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (45)
Advertisement
DelhiElectionResults, AAPWinningDelhi, DelhiPolls2020, DelhiResultOnZee, DelhiResults, டில்லிதேர்தல், கெஜ்ரிவால், அர்விந்த்கெஜ்ரிவால், மக்கள், நாடு,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாட்டிற்கு கிடைத்த வெற்றி என 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தலில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக,ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உள்ளார். அமோக வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை கெஜ்ரிவால் சந்தித்தார்.





அப்போது அவர் கூறியதாவது: எனது குடும்பத்தினருக்கும், மக்களுக்கும், கடவுள் ஹனுமனுக்கும் நன்றி. மூன்றாவது முறையாக என் மீது நம்பிக்கை வைத்துள்ள டில்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை, தங்களது மகனாக நினைத்தவர்களுக்கும், எங்களுக்காக ஓட்டளித்தவர்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி டில்லியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கு கிடைத்த வெற்றி. தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர்களுக்கும் கிடைத்த வெற்றி.




தேர்தல் முடிவு மூலம், புது மாதிரியான அரசியல் பிறக்க வழி கிடைத்துள்ளது. இது புதிய அறிகுறி. அனைவருக்கும், ஒரு தெளிவான செய்தியை டில்லி அனுப்பியுள்ளது. வளர்ச்சிக்காக டில்லி மக்கள் ஓட்டளித்துள்ளனர். டில்லியின் வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் வெற்றியும் கூட. கடவுள் ஹனுமன் நம்மை ஆசிர்வதித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பானதாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி கொள்கிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202012:30:58 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் மக்கள் நாயகன் கெஜ்ரிவாலை வாழ்த்த வார்த்தை இல்லை...எந்த பணபலமோ பின்புலமோ இல்லாம அமோக வெற்றி சாதாரணம் அல்ல.மக்கள் மனதை வென்றுள்ளீர்கள்.ஜனநாயகம் செத்துவிடுமோ என்று விரக்தியில் இருக்கும் பலகோடி பேருக்கு உங்கள் வெற்றி நம்பிக்கை தருது...உங்களின் பாரத்மாத்தாக்கி ஜே கோசத்தில் உண்மை கொப்புலிக்குது போலித்தனம் இல்லை.வாழ்க என் நாடு.உங்களை போன்ற நிறையவர்களை பாரதமாதா பெற்றருளட்டும்.
Rate this:
Share this comment
Cancel
sathyam - Delhi,இந்தியா
12-பிப்-202011:04:10 IST Report Abuse
sathyam இலவசம் . தமிழ்நாட்டை போல இலவசம்,இலவசம் என்று சொல்லி வோட்டு வாங்கியது வெட்க கேடு . இதில என்ன பெருமை? . எவன் அப்பன் வீடு வரி பணம் ?
Rate this:
Share this comment
Cancel
jeyakumar - Wellington,நியூ சிலாந்து
12-பிப்-202009:30:01 IST Report Abuse
jeyakumar பிச்சை எடுக்கும் கூட்டத்திற்க்கு பிரீ யா எல்லாம் கொடுத்தா ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X