இளைஞரின் நிர்வாண ஊர்வலம்:3 பேர் கைது

Added : பிப் 11, 2020
Advertisement

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில், தன் சகோதரியுடன் இருக்கும் காட்சிகளை, சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை, நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற, பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானில், மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், 20 வயது இளைஞரை, 10 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக அடித்து நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்றதுடன், அதனை, 'வீடியோ' எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து, போலீஸ் உதவி கமிஷனர் புஷ்பேந்திர சிங் கூறியதாவது:இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர், தன் வீட்டின் அருகில் வசிக்கும் பெண்ணுடன், சிறு வயது முதல் நட்புடன் பழகியுள்ளார். அந்த பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோவை, 'டிக்-டாக்'கில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவைப் பார்த்த பெண்ணின் சகோதரர், தன் ஒன்பது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதுடன், அவரின் உடைகளை கழற்றி நிர்வாணமாக்கியுள்ளார். இதை வீடியோ எடுத்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளோம்; மற்றவர்களை தேடி வருகிறோம்.பாலியல் ரீதியில் தன் சகோதரியை துன்புறுத்தியதாக, பெண்ணின் சகோதரர் புகார் கொடுத்ததால், இளைஞர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X