பொது செய்தி

இந்தியா

பீஹார் மஹாபோதி கோவிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே தரிசனம்

Added : பிப் 11, 2020
Advertisement
 பீஹார் மஹாபோதி கோவிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே தரிசனம்

கயா : ஐந்து நாள் பயணமாக நம் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, நேற்று, பீஹார் மாநிலத்தில் உள்ள மஹாபோதி கோவிலில் தரிசனம் செய்தார்.

அண்டை நாடான இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, நம் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம், பீஹார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள மஹாபோதி கோவிலுக்கு வந்தார்.பீஹார் விவசாய துறை அமைச்சர் பிரேம் குமார் மற்றும் அதிகாரிகள், அவரை வரவேற்றனர். இதன்பின் கோவிலுக்கு சென்ற ராஜபக்சே, தரிசனம் செய்தார். அரை மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்த ராஜபக்சே, பின் புறப்பட்டுச் சென்றார்.கவுதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில், இந்த மஹாபோதி கோவில் உள்ளது. சர்வதேச பாரம்பரிய சின்னமாக உள்ள இந்த கோவிலுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்த மதத்தினர் யாத்திரை வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புனித நதியான கங்கைக்கு சென்ற ராஜபக்சே, கங்கையை துாய்மை படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.திருமலைநேற்று மாலை, ராஜபக்சே, தன் குடும்பத்தினருடன், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு வந்தார். அவரை சித்துார் கலெக்டர் நாராயண் பகத் குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின் அவர்கள், தனி கார் மூலம் திருமலைக்கு சென்றனர்.அவர்களை, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகை அருகில் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இரவு திருமலையில் தங்கிய அவர், இன்று காலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். இலங்கை பிரதமரின் வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X