டில்லியில் பாஜ., தோல்வி ஏன்?

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (87)
Share
Advertisement
DelhiResults, DelhiElectionResults, DelhiElection2020, AAPWinningDelhi, BJP, Lose, Reason, டில்லி, தேர்தல், சட்டசபை, பாஜ, பாஜக, பாரதீயஜனதா, தோல்வி, ஆம்ஆத்மி, காரணங்கள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பாஜ.,வின் தோல்விக்கு 10 காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

டில்லியில் கடந்த 8ம் தேதி, நடந்த பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (பிப்.,11) எண்ணப்பட்டன. எண்ணிக்கை துவங்கியது முதல் பெரும்பான்மை இடங்களில் ஆம்ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 63 தொகுதிகளிலும், பாஜ., 7 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால், தொடர்ந்து, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கிறார். தலைநகர் டில்லியில் 21 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியாமல் தவிக்கும் பாஜ., மேலும், 5 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.


latest tamil news


இந்நிலையில், பாஜ., தோல்விக்கு அரசியல் வல்லுனர்கள் முன்வைக்கும் காரணங்கள்:

1. லோக்சபா தேர்தலில் மோடியை போல, டில்லி பொதுத்தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு மாற்று யாரும் இல்லாதது ஆம்ஆத்மியின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. கெஜ்ரிவால் பிரசாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டார், ஆனால், பாஜ.,வின் பிரசாரத்தில் கெஜ்ரிவால் தனிப்பட்ட முறையிலேயே விமர்சிக்கப்பட்டார். அவர் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாரோ அந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளார்.

2. பாஜ., சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காதது முக்கிய காரணம். ஆம்ஆத்மி அதையே டில்லி மக்களிடம் சொல்லி, பிரசாரம் செய்தது. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் போன்றவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி இருந்தால், வெற்றி, தோல்வியின் விகிதம் மாறியிருக்கலாம்.

3. 2017 ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி படுதோல்வி அடைந்ததும், அப்போது இருந்தே சட்டசபை தேர்தலுக்கு தயாரானது. ஆனால், வேட்பு மனுத்தாக்கலுக்கு பிறகு தான் பாஜ., பிரசாரத்தை தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட் போல ஆம்ஆத்மி நிதானமாக விளையாடியது எனில், பாஜ., 'டுவென்டி-20' போட்டி போல அவசரமாக செயல்பட்டது. இதில், பாஜ.,வை விட ஆம்ஆத்மி சிறப்பாக தயாரானது.

4. 2013ம் ஆண்டு தேர்தலில் இலவச மின்சாரம், இலவச தண்ணீர் தருவதாக ஆம்ஆத்மி கூறியது. 2015ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றவும் செய்தது. இதனால், 2020 தேர்தலிலும் அது தொடரும் எனவும் ஏழைகளுக்கான அரசு எனவும் கருதி, மக்கள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்துள்ளனர்.


latest tamil news


5. கடந்த 6 மாதங்களாக, கெஜ்ரிவால் அரசு சில இலவச திட்டங்களை அமல்படுத்தியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச பஸ் மற்றும் மெட்ரோவில் பயணம் செய்யும் வசதி அதில் ஒன்று.

6. பெண் வாக்காளர்களே அதிகம் ஆம்ஆத்மிக்கு ஓட்டளித்துள்ளனர். 'ஆக்சிஸ் மை இந்தியா' நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், 53 சதவீத ஆண்களும், 59 சதவீத பெண்களும் ஆம்ஆத்மிக்கு ஓட்டளித்ததாக கூறியுள்ளனர். ஆண்களை விட பெண்கள் 6 சதவீதம் அதிகம் இருப்பதற்கு, கடந்த 3 மாதத்திற்கு முன்பு, பெண்கள் பாதுகாப்பிற்கு பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதே காரணமாக அமைகிறது.

7. டில்லி மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர். பாஜ.,வை எதிர்க்கும் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற்று வந்த காங்., கடந்த 2015ல் ஆம்ஆத்மியிடம் மொத்தமாக இழந்தது. தற்போதைய தேர்தலிலும் சிறுபான்மையினர் பெரும் அளவில் ஆம்ஆத்மியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

8. சில பாஜ., தலைவர்களின் எதிர்மறையான பிரசாரம், நடுத்தர வர்க்க பாஜ., ஆதரவாளர்களை கோபப்படுத்தியது. எதிர்மறையான பிரசாரத்தால் 2015ல் ஓட்டுகளை இழந்தது போல், இப்போதும் பாஜ இழந்துவிட்டது. பிரசாரத்தில் 'போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுடவேண்டும்' என கோஷம் எழுப்பப்பட்டது. இதனை பாஜ., தவிர்த்திருக்கலாம்.

9. கெஜ்ரிவால், ஹனுமன் பக்தி பாடலை பாடி தன்னை ஹனுமன் பக்தராக காட்டிக்கொண்டார். இதுவும் ஆம்ஆத்மியின் புது யுக்தியாக அமைந்தது. அதேபோல், ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடத்தும் முஸ்லிம்களை ஆம்ஆத்மி ஆதரிக்கிறது என பாஜ., கூறி வந்த நிலையில், போராட்டக்காரர்களை ஆம்ஆத்மி கட்சியினர் சந்திக்கவில்லை. இது கட்சியின் மீது முஸ்லிம் சாயம் பூசப்படுவதை தவிர்த்தது. மேலும், கெஜ்ரிவால் ஹனுமன் பாடல் பாடும் வீடியோவால், பாஜ.,வில் உள்ள ஹிந்து வாக்காளர்களையும் அவர் கவர்ந்துள்ளார்.

10. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியால் பாஜ., அதிக நம்பிக்கையுடன் இருந்தது. அதுமட்டுமல்லாமல், முத்தலாக், குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோயில் குறித்த சுப்ரீம் கோர்டின் உத்தரவு ஆகியவற்றை கொண்டு ஹிந்துக்களின் ஓட்டுகளை எளிதாக பெறலாம் என நினைத்திருந்தது. ஆனால், ஆம்ஆத்மி அவர்களின் திட்டங்களை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. அரசியல் என்பது உணர்வின் விளையாட்டு என்பது போல, தேர்தல் போட்டியில் கருத்து போரை ஆத்ஆத்மி சிறப்பாக வென்றது.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-பிப்-202020:50:08 IST Report Abuse
bal வேலை செய்யணும்....வரி உயர்வு....LPG காஸ் விலை உயர்வு...வேலை இல்லை...தொழில் மந்தம்...
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-பிப்-202020:29:54 IST Report Abuse
skv srinivasankrishnaveniமானியமும் உயர்த்தி இருக்கே அரசு அதை என் சொல்லலீங்க ஏவாளும் பிஜேபி எதை செய்தாலும் தப்பு ஏன்னா கேஜ்ரிவாலா போல எல்லாம் இலவசமா தந்தாள் ஏன்னு இளிச்சுங்ட் போவேளா ????யோசிக்கவும்...
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
13-பிப்-202008:20:41 IST Report Abuse
Krish கெஜ்ரிவால் கிட்டே காங்கிரஸ் அளவுக்கு கெட்ட பழக்கங்கள் இல்லை போலிருக்கிறது. மற்றும் நிறைய இலவசங்கள். பிஜேபி கிட்ட தமிழ்நாடு போல தலைவர் பஞ்சமாக இருக்கலாம். டில்லி மக்களில் எவ்வளவு பேர் படித்து சிந்தித்து போடுபவர்கள் ? நிறைய என்றால் பிஜேபி இன்னொரு Vajpayee தேட வேண்டும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-202020:22:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜக வுக்கு எல்லா இடங்களிலும் இனி பின்னடைவு - ஐ மீன், ஆப்பு தான். பணவீக்கம் 8%.. வரும் தேர்தல்களில் விரட்டியடிக்கப்படும் படுகுழி பாஜக. 👍
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
12-பிப்-202021:34:57 IST Report Abuse
Aarkayபெயரை ஜெய் பக்கிபுரம் என மாற்றிவைத்துக்கொள். எந்த பெயரில் வந்தாலும், ஒட்டகம் ஒட்டகமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X