பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., படிப்புக்கு கட்டணம் உயருகிறது: ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரை

Added : பிப் 11, 2020
Share
Advertisement


புதுடில்லி: கல்லுாரி பேராசிரியர்களுக்கு சம்பள கமிஷன் விதிமுறைப்படி சம்பளம் வழங்கிட, இன்ஜினியரிங் படிப்பு கட்டணத்தை உயர்த்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

இன்ஜினியரிங் கல்லுாரிகள் சில தங்களுக்கு சம்பள கமிஷன் நிர்ணயித்த விதிமுறைகளின்படி சம்பளம் வழங்குவதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) புகார்கள் வந்தன. இதனையடுத்து ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஆறாவது மற்றும் ஏழாவது சம்பள கமிஷனின் ஆணைகளை பரிசீலிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் உள்ள இன்ஜி., படிப்புகளுக்கு மாநில கட்டண நிர்ணய கமிட்டி தான் கட்டணம் நிர்ணயம் செய்து வருகிறது. கடைசியாக 2017--18ம் ஆண்டில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைப்படி, இன்ஜி., படிப்புகளுக்கு ஆண்டுக்கு எவ்வளவு கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கலாம் எனக்கூறப்பட்டது.இதனால், இன்ஜி., படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே சம்பள கமிஷன் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரை செய்துள்ளது.

அதாவது கட்டணத்தை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்த வேண்டும் எனவும், குறைந்தபட்ச கட்டணத்தை கவுன்சில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. இதனால், இன்ஜி., படிப்புகளுக்கான கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X