சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை மாத்திரை சாப்பிட்டு மனநோயாளியாகும் இளைஞர்கள்

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 போதை மாத்திரை சாப்பிட்டு மனநோயாளியாகும் இளைஞர்கள்


உடுமலை : உடுமலையில், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை சீரழித்த போதை ஊசி சப்ளை கும்பல் சிக்கியுள்ளது; ஒட்டுமொத்த கும்பைலையும் கைது செய்தால் மட்டுமே திசைமாறும் இளைஞர்களை பாதுகாக்க முடியும்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து, போதை ஊசி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, உடுமலை கொல்லன்பட்டறை, சாதிக்நகரை சேர்ந்த, ரகுமான், 26, காஜாமைதீன், 33, ஜெய்லானி காலனி, சதாம் உசேன், 25, அய்யலு மீனாட்சி நகர், ஷியாம், 24, மருந்துக்கடை உரிமையாளர், வெள்ளகோவில், முத்துார் ரோட்டைச்சேர்ந்த, அர்ஜூன்,25 ஆகியோரை கொண்ட கும்பலை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அவர்களிடமிருந்து, 478 மாத்திரைகள், 550 கிராம் கஞ்சா மற்றும் ஊசி, சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆபத்தான போதை தடை செய்யப்பட்ட இந்த மாத்திரை, அறுவை சிகிச்சை மற்றும் கிட்னி பெயிலியர் உள்ளிட்ட சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரையை உடைத்து பொடியாக்கி போதைக்கு பயன்படுத்துகின்றனர்.இதற்கு அடிமையாகும் இளைஞர்களின் உடல் நிலை ஒரு கட்டத்தில், உயிரிழப்பு வரை கொண்டு போய் விடுகிறது. கைது செய்யப்பட்ட ரகுமானின் தம்பி, நாசர், உடல் நிலை மோசமாகி, எந்த சிகிச்சையும் அளிக்க முடியாமல் இறந்தார்.இருப்பினும், அண்ணனும் போதைக்கு அடிமையானதால், இந்த விற்பனையை தொடர்ந்துள்ளார். இதே போல், நுாற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், இந்த போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

மனநோயாளி போல் கண்டு பிடிக்க முடியாத போதையில் சுற்றி வரும், பிள்ளைகளை பார்த்து, பெற்றோர்கள் வேதனையடைந்துள்ளனர்.உடுமலை மட்டுமன்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலும், இக்கும்பல் போதை ஊசி சப்ளை செய்து வருகிறது. சிக்கிய நபர்களில் ஒருவர், மும்பையிலிருந்து ஆன்-லைன் மூலம், மருந்துகள் கொள்முதல் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை, 150 ரூபாய்க்கு வாங்கி, 1,500 ரூபாய் வரை விற்று லாபம் பார்த்துள்ளனர். ஒரு நாள் உடுமலை சப்ளைக்கே, 500 மாத்திரைகள் வரை வைத்திருந்த நிலையில், மிகப்பெரிய 'நெட் ஒர்க்' இதில் இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-பிப்-202019:41:24 IST Report Abuse
Natarajan Ramanathan இதில்கூட இருக்கிறான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X