மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்: பா.ஜ.,

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (22)
Advertisement
டில்லிதேர்தல், நட்டா,பாஜ, கெஜ்ரிவால், ஆம்ஆத்மி, delhielection, delhiresults, jbnadda,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியில் அமர உள்ளது. பா.ஜ., 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டில்லி மக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ., மதிக்கிறது. இந்த தேர்தலில் தொண்டர்கள் ஓய்வில்லாமல் உழைத்தனர். தேர்தல் நாளன்று இரவு பகல் பாராமல் பாடுபட்டனர். அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.




தேர்தல் முடிவுகளை ஏற்று கொண்டு, பா.ஜ., ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். டில்லியின் வளர்ச்சி குறித்த விவகாரங்களை தொடர்ந்து எழுப்புவோம். ஆம்ஆத்மி ஆட்சியின் கீழ் டில்லி வளர்ச்சி பெறும் என நம்புகிறேன். கெஜ்ரிவாலுக்கும், ஆம்ஆத்மிக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் நட்டா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
12-பிப்-202010:10:01 IST Report Abuse
Appan டில்லி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்...இப்படி சொல்வதை விட்டு ஏன் இப்படி மரண அடி கொடுத்தார்கள் என்று அலசினால் நல்லது...முதலில் அமித் ஷாவை பிஜேபியில் இருந்து கொஞ்சம் காலம் ஒதுக்க்கினால் எல்லோருக்கும் நல்லது.. இல்லை பிஜேபி காங்கிரஸ் போல் அனாதை ஆகிவிடும்..இது 21 ஆம் நூற்ராண்டு...10 நூற்ராண்டு இல்லை..அரசர் சொல்வார் எல்லோரும் அதன் படி நடக்க,,?.இந்திய இந்துக்களின் நாடு..இதை பாதுகாக்க பிஜேபி தேவை..ஆனால் இப்போ இருக்கிற பிஜேபிக்கு மதம் தான் தெரிகிறது..நாட்டை பற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை..ஷா போல் ஆட்கள் இருந்தான் காங்கிரசின் வழியே பிஜேபி போய்விடும்..
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
12-பிப்-202010:09:50 IST Report Abuse
narayanan iyer பெரும்பாலான மக்கள் சொல்வது கிஷோரின் உதவியால்தான் என்கிறார்கள் . வோட்டர்களின் பங்கு தெரியவில்லை . தயவு பண்ணி இனியும் தொடர் தோல்விகளை தவிர்க்க கிஷோரை பிஜெ பி பக்கம் கொண்டுவாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
11-பிப்-202022:27:13 IST Report Abuse
m.viswanathan நீங்க மதிக்கவும் வேணாம், மிதிக்கவும் வேணாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X