காங்., நிலைமை அந்தோ பரிதாபம்; 63 தொகுதிகளில் டெபாசிட் காலி

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (48)
Advertisement
DelhiPolls2020,Congress,rahulgandhi,rahul,DelhiElectionResults,AAPWinningDelhi, டில்லிதேர்தல்,காங்கிரஸ்,கெஜ்ரிவால்,ஆம்ஆத்மி,ராகுல்,ராகுல்காந்தி

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., கட்சி, 63 தொகுதிகளில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.


தலைநகர் யாருக்கு?


70 உறுப்பினர்கள் அடங்கிய டில்லி சட்டசபைக்கு, கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதா தளம், இரண்டு தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. காங்கிரஸ், 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டன.






மீண்டும் கெஜ்ரி:


இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என்பது உண்மை. காங்கிரஸ் சார்பில், சோனியா பிரசாரம் செய்யவில்லை. ராகுலும், பிரியங்காவும், ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்தனர். அதனால், தேர்தலில், ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே தான், போட்டி நிலவியது. அதற்கு தகுந்தாற்போல 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி, 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக உள்ளார்.






காங்., படுதோல்வி:


தேர்தல் பணிகளில் ஈடுபாடு காட்டியதால், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதமும் கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது. 8 இடங்களில் வெற்றி பெறும் பா.ஜ.,வுக்கு, கடந்த தேர்தலை விட 5 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். காங்., நிலைமை தான் அந்தோ பரிதாபம். போட்டியிட்ட 66 இடங்களில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி முன்னிலை வகிக்கவில்லை. அதைவிட, 63 இடங்களில் அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியதால், காங்., கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.





தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்., கட்சிக்கு வாய்ப்பளித்து, ஷீலா தீட்சித்தை முதல்வராக ஏற்றுக்கொண்ட டில்லி மக்கள், அதன்பின் தொடர்ந்து காங்., கட்சியை புறக்கணிப்பது இத்தேர்தல் முடிவிலும் வெளிப்படையாக தெரிகிறது. காங்., கட்சி சார்பில், அர்விந்தர் சிங் (காந்திநகர் தொகுதி), தேவேந்திர யாதவ் (பத்லி தொகுதி) மற்றும் அபிஷேக் தத் (கஸ்தர்பா நகர்) ஆகியோர் மட்டும் டெபாசிட் பெற்றனர்.

கடந்த 2015ல் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்டு சாந்தினி சவுக் தொகுதியில் வென்ற ஆல்கா லம்பா, இத்தேர்தலில் கட்சி தாவி காங்., சார்பில் போட்டியிட்டார். அவரும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-பிப்-202017:16:34 IST Report Abuse
madhavan rajan ராகுல் மட்டும் இருந்து சில சீட்டுக்கால் வாங்கியது காங்கிரஸ். பிரியங்காவும் சேர்ந்த பிறகு பெரிய பூஜ்யம் தொடர்கிறது. நல்ல திறமைசாலிகள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-பிப்-202017:13:47 IST Report Abuse
Endrum Indian வெற்றி வெற்றி மற்ற இடங்களில் டெபாசிட் கிடைத்து விட்டது - முஸ்லீம் நேரு காங்கிரஸ் பப்பு
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
12-பிப்-202016:22:50 IST Report Abuse
Suman 40 ஆண்டு சாதனைக்கு கிடைத்த பரிசு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X