சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தினசரி கப்பம் வசூலிக்கும் வனத்துறை அதிகாரி!

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 தினசரி கப்பம் வசூலிக்கும் வனத்துறை அதிகாரி!

''ஏலக்காய் டீ போடும் நாயர்...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்த அன்வர்பாய், ''ஒரு வருஷத்துக்கு அன்னதானம் போடப் போறாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார்.

''யாரு வே அந்த தர்மப் பிரபு...'' என விசாரித்தார், அண்ணாச்சி.

''வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், ஜெ., பேரவை மாநில செயலராகவும் இருக்காரே... ஜெயலலிதாவின் பிறந்த நாள், வர்ற, 24ம் தேதி வருதுபா... ''இதுக்காக, ஜெ., பேரவை சார்புல, தன் திருமங்கலம் தொகுதியில, அன்னதானம் வழங்குற திட்டத்தை, போன, 1ம் தேதி துவங்கி வச்சார்... ''வாரத்துல இரண்டு நாட்களை தேர்வு பண்ணி, தொகுதி முழுக்க இருக்கிற கிராமங்கள்ல அன்னதானம் வழங்க போறாரு பா...

''இந்த திட்டம், 2021 பிப்ரவரி முடியுற வரைக்கும் தொடர இருக்கு... இதுக்காக, ஒரு சமையல் குழுவையும் அமைச்சர் ஒப்பந்தம் பண்ணியிருக்கார்... ''அதுவும் இல்லாம, பேரவை சார்புல, மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும் முடிவு பண்ணியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''அது சரி... அடுத்த வருஷம் தேர்தலுக்கு, இப்பவே தயாராகிறார்னு சொல்லும்...'' என்ற அண்ணாச்சி, ''லஞ்சம் தராததால, அலைய விடுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''பெரம்பலுார், வெங்கனுார் மஜிரா பெரியம்மாபாளையம் கிராமத்துல, ஜாமியா பள்ளிவாசல் இருக்கு... ''பள்ளிவாசலுக்கு சொந்தமான, 1.09 ஏக்கர் நிலத்தை வித்து, அந்தப் பணத்துல, பள்ளிவாசலை பெருசா கட்ட, முஸ்லிம் சமுதாய பிரமுகர்கள் முடிவு செஞ்சாவ வே...

''இதுக்காக, வேப்பந்தட்டை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு போயிருக்காவ... அங்க இருந்த அதிகாரி, 30 ஆயிரம் லஞ்சம் கேட்க, 20 ஆயிரம் தர்றதா இவங்க சொல்ல, அதிகாரிக்கு லஞ்சத்தை குறைக்க மனசில்லை வே... ''அதனால, வக்பு வாரியத்துல இருந்து தடையின்மை சான்று, கோர்ட் ஆர்டர், பள்ளிவாசல்ல போட்ட தீர்மானம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துட்டு வாங்கன்னு, நிர்வாகிகளை அலைக்கழிச்சிருக்காரு... ''அதிகாரி மேல உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்ல வே...'' என்றார், அண்ணாச்சி.

''பாலு இப்படி உட்காரும்...'' என்ற குப்பண்ணா, ''கப்பம் கட்டலைன்னா, 24 மணி நேரமும், 'ட்யூட்டி' பாருங்கோன்னு படுத்தி எடுக்கறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு தாவினார். ''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''நீலகிரி மாவட்டம், சேரம்பாடியில இருக்கிற வன அதிகாரி, தேவாலா வனச்சரகத்தையும் அடிஷனலா கவனிச்சுண்டு இருக்கார்... ''சேரம்பாடி சோதனைச் சாவடியில, 'ட்யூட்டி'யில இருக்கற வனக்காப்பாளர்கள், வாகன சோதனை நடத்தி, அதிகாரிக்கு, தினமும், 500 ரூபாய் தந்துடணும் ஓய்...

''அதே மாதிரி, நாடுகாணி சோதனைச்சாவடியில இருக்கறவா, தினமும், 700 ரூபாய் கப்பம் கட்டணும்... கட்ட மறுத்தா, 24 மணி நேரமும் ட்யூட்டி போட்டு, நோக அடிச்சுடறார் ஓய்... ''இவரைப் பத்தி, உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிச்சும், பலன் இல்லாம போச்சு... இப்போ, வனத்துறை அமைச்சருக்கே புகார் பறந்துடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.

டீக்கடை ரேடியோவில், 'அடுத்து சின்னதம்பி படப் பாடல் ஒலிக்கும்' என்ற அறிவிப்பு வெளியாக, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-பிப்-202006:30:19 IST Report Abuse
D.Ambujavalli அமைச்சருக்கு இப்போது தான் செய்தி போகிறதாம் அவர் ஆசீர்வாதம் இல்லாமலா இந்த ‘சின்ன’தனம் நடக்கிறது குப்பத்தில் சேர வேண்டியது எப்போதோ சென்றுவிட்டிருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X