சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'சகலகலா வல்லவராக இருக்கட்டும்...!'

Added : பிப் 11, 2020
Advertisement
 'சகலகலா வல்லவராக இருக்கட்டும்...!'

'பல்துறை வித்தகராக இருக்கிறார். இவரைப் போன்ற தலைமை கிடைத்ததற்கு, நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை பெருமிதத்துடன் கூறுகின்றனர், அந்த கட்சி நிர்வாகிகள்.

மம்தா, இளம் வயதிலிருந்தே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர். கதை, கட்டுரைகளையும் எழுதுவார். இவை எல்லாவற்றையும் விட, மம்தா பானர்ஜி, மிகச் சிறந்த ஓவியர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மிக முக்கியமான தலைவர்களை சந்திக்கும்போது, தான் வரைந்த ஓவியங்களை அவர்களுக்கு பரிசளித்து மகிழ்வது மம்தாவின் வழக்கம்.

ஆனால், புடவை, 'டிசைன்' செய்வதிலும் மம்தா கைதேர்ந்தவர் என்பது, இப்போது தான் பலருக்கும் தெரியவந்தது. தான் அணியும், காட்டன் மற்றும் கதர் புடவைகளின், 'பார்டர்' எப்படி இருக்க வேண்டும் என்பதை, மம்தாவே, 'டிசைன்' செய்து கொடுக்கிறார். நாடியா மாவட்டத்தில் உள்ள நெசவாளர்கள், இந்த புடவைகளை தயாரித்து கொடுக்கின்றனர். ஒரு புடவையின் விலை, 3,000 ரூபாய். திரிணமுல் காங்., கட்சியினருக்கே, இப்போது தான் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சியினரோ, 'சகலகலா வல்லவர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சக தலைவர்களை மதிக்காமல் எக்குத் தப்பாக பேசுகிறாரே... அந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள்' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X