சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 'டவுட்' தனபாலு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: கட்சிக்கு கொடி உருவாக்கப்பட்ட, 20 ஆண்டுகளில், எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும், சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் சந்தித்த போதும், நம் தொண்டர்கள், என்னுடன் உறுதியாக இருக்கின்றனர். அவர்களால் தான், நம் கட்சி வீறு கொண்டு, வெற்றி நடை போடுகிறது.

'டவுட்' தனபாலு: தமிழக அரசியலின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நீங்கள், கடந்த சில ஆண்டுகளாக, அன்றாட அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதால், கள நிலவரம் உங்களுக்கு சரியாக தெரியவில்லையோ என்ற, 'டவுட்' வலுவாக ஏற்படுகிறது. ஏனெனில், கட்சியில் முக்கிய தலைவர்கள் இல்லை; ஓட்டு சதவீதம் குறைந்து விட்டது; மக்கள் மத்தியிலும் வரவேற்பு இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க, வீறு கொண்டு கட்சி நடக்கிறது என்கிறீர்களே, நியாயம் தானா?

***

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபர், தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர். இந்த முறைகேடுகள் எல்லாம், தி.மு.க., ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகள்; அ.தி.மு.க., ஆட்சியில், களைடுத்து வருகிறோம். இதுவரை, 35க்கும் மேற்பட்டோர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

'டவுட்' தனபாலு: 'அந்த பார்த்தீனிய செடிகளை முழுமையாக களையெடுக்காமல் விட்டது, உங்கள் அரசின் கையாலாகாத தனம் தானே...' என, எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போடுவது, எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது என்பது தான் என், 'டவுட்!' தோண்ட தோண்ட பூதம் போல கிளம்பும் முறைகேடுகளை கண்டுபிடிக்காமல் இருந்தது, அந்தத் துறையின் அமைச்சரான உங்களுக்கும், டவுட்டே இல்லாமல், சிக்கல் தான்!

***

தமிழக காங்., தலைவர் அழகிரி: தமிழக அரசின் தொழிற் கொள்கை என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. எந்த தொழிலை செய்யலாம்; எந்த தொழிலை செய்யக் கூடாது என்பதில், தெளிவான பார்வையும் இல்லை. லட்சக்கணக்கான இன்ஜினியரிங் பட்டதாரிகள் படித்து விட்டு, வேலை வாய்ப்பு கோரி நிற்கின்றனர். அத்தகைய இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்க, தமிழக அரசு என்ன தொழிற் கொள்கையை கொண்டிருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர் என்கிறீர்கள். அதற்காக பெரிய திட்டங்கள் எதையாவது அறிவித்தால், தி.மு.க., - கம்யூ.,க்கள் - வி.சி., நாம் தமிழர் போன்றோர் கொதித்தெழுந்து விடுகின்றனரே... இந்த லட்சணத்தில், புதிய தொழில்கள் எப்படி வரும்; எவ்வாறு அதை எதிர்பார்க்கிறீர்களோ என்ற என், 'டவுட்' சரி தானா?

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
12-பிப்-202008:56:13 IST Report Abuse
a natanasabapathy Intha azhagiriyin amma aatchiyil 10 varudankal yentha thuraiyilum velaikku aatkal yedukkaamal thavirthanare Athan kaaranamaaka elaignarkal Watts virotha seyalkalil edupattathu kenaiyanukku maranthu viytathaa
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-பிப்-202006:23:40 IST Report Abuse
D.Ambujavalli அதுதான் லட்சக்கணக்கில் ‘வாங்கிக்கொண்டு’ பணிகள் கொடுக்கிறோமே கையிலே காசு, வாயிலே தோசை காசில்லாதவன் புலம்பலுக்கெல்லாம் நாங்கள் ஏன் காது கொடுக்க வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X