சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இவர்கள் அரிச்சந்திரன்களா?

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 இவர்கள் அரிச்சந்திரன்களா?

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொறுப்புள்ள பதவிகளில் இருப்போர், வரி ஏய்ப்பு செய்யும் போது, நடிகர் விஜய், தன் உண்மையான வருமானத்தை காட்ட மறைத்தது எல்லாம் இமாலயத் தவறே இல்லை. வருமான வரித் துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனைகளில், பிடிபட்ட பணம், நகைகள், ஆவணங்கள் அத்தனையும் உண்மையா என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

சினிமாவில், உத்தமர் வேஷம் போட்டு, 'பஞ்ச்' டயலாக் எல்லாம் பேசும் நடிகர் விஜய் போன்ற, ஹீரோக்கள், நிஜவாழ்க்கையில், அயோக்கிய சிகாமணிகளாக இருப்பது, புதுமை அல்ல! சினிமாவில், கோடி கோடியாக சம்பாதித்து, கொள்ளை அடித்த நடிகர்கள், அரசியலில் இறங்கி, கட்சி துவங்கி, மேலும் மேலும் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கத் தானே ஆசைப்படுகின்றனர்.

ஞானசூன்யங்களாக இருக்கும் தமிழர்கள், அயோக்கிய சிகாமணிகளை, அரியணையில் அமர்த்தி அழகு பார்க்க துடிக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர், நல்ல ஆடிட்டர்களை வைத்து, 'கோல்மால்'கள் செய்து வருமான வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதுவரை, வருமான வரியை முறைப்படி செலுத்தாமல் ஏமாற்றிய, எந்த சினிமா நடிகராவது, சட்டப்படி தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கிறாரா?

நடிகர்கள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் நடத்தும் புண்ணியவான்கள், வியாபாரிகள் எல்லாம், தம் உண்மையான வருமானத்தை தெரிவித்து, வருமான வரி செலுத்த வேண்டும். அப்படி செய்வோர் ஒரு சிலரே. ஆடிட்டர்கள் உதவியால், வருமான வரி துறையினருக்கு, 'கோல்மல்' கணக்கு கட்டி, தேச பக்தியை காட்ட, வியாபாரிகள் அனைவரும் அரிச்சந்திரன்களா?

***


'டிஜிட்டல்' தி.மு.க., உருவானதில் தவறே இல்லை!

சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையால் நிறுவப்பட்டு, கருணாநிதியால், அடை காக்கப்பட்ட, தி.மு.க.,விற்கு, அரசியலில் ஆலோசனை கூற, 'கார்ப்பரேட் நிறுவனம் தேவையா?' என, கேள்வி கேட்க தோன்றும். தற்போதைய, 'டிஜிட்டல்' காலத்தில், அது தவறில்லை என்றே தோன்றியது. இந்த, 'ஐ பேக்' பிரசாந்த் கிஷோர் தான், பிரதமர் மோடிக்கு, வெற்றி வியூகம் அமைத்து தந்தார். சில மாநிலங்களில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் நடந்திருப்பதும், பிரசாந்த் கிஷோர் காரணம்.

தொண்டர்கள் பலம் உடையது, தி.மு.க., இருப்பினும், இரண்டு சட்டசபை பொது தேர்தல்களிலும், தி.மு.க.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பிரசாந்த் கிஷோர் திட்டத்தை பார்த்து தான், அவரிடம், தி.மு.க., ஆலோசனைகளை நீண்ட காலமாக பெற்று வந்தது. பின், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன் டுவிட்டர் பதிவில், 'பிரசாந்த் கிஷோர் நடத்தும், கார்ப்பரேட் நிறுவனத்துடன், தி.மு.க., ஒப்பந்தம் செய்துள்ளது. அவர்களின் ஆலோசனையை பெற்று, எதிர்காலத்தில் தி.மு.க., செயல் படும்' என, கூறி இருந்தார்.

இனி, அதிகாலை வாக்கிங் போவது முதல், இரவு மேடைகளில் பேசுவது வரை, ஸ்டாலின், கிஷோர் சொல்படி தான் நடக்க வேண்டும். தி.மு.க., வெற்றி பெறக் கூடிய கட்சியாக, ஆட்சியில் அமர்த்தக்கூடிய கட்சியாக மாற்றுவது, கிஷோரின் வேலை; உதாரணமாக, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி போன்றோரே சாட்சியாக உள்ளனர். பயந்து விட்டதால் தான், கார்ப்பரேட்டை நாடுகிறது, தி.மு.க., என்றாலும் கூட, கிஷோரை புக் செய்ய, பல கட்சிகள், தமிழகத்தில் முனைப்பு காட்டியது உண்மை.

இந்திய அரசியலில் பல தொழில்நுட்பம் வந்த போதிலும், அதை, தி.மு.க., முந்தி, 'கார்ப்பரேட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பல கட்சிகளும், ஐ.டி.பிரிவு என்றே உருவாக்கி, அதில் முக்கியமானவர்களை பதவியில் அமர்த்தி இருக்கும் வேளையிலும், 'டிஜிட்டல் இண்டியா' என்ற நிலையில், 'டிஜிட்டல்' தி.மு.க., உருவானதில் தவறே இல்லை!

***


காங்கிரசுக்கு நல்லது எது?

க.பூங்கோதை, செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: 'காங்கிரசை மதித்தால் தி.மு.க., ஆட்சி அமையும்' என்ற தலைப்பில், இதே பகுதியில் வாசகர் ஒருவர், கடிதம் எழுதி இருந்தார்; அது மறுக்கப்பட வேண்டிய கருத்து. கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை மதித்து, 40 சீட் கொடுத்ததில், எட்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 30ல் வென்று இருந்தாலும் கூட, தி.மு.க., ஆட்சியை பிடித்திருக்கும். அந்த வடு, இன்னும், தி.மு.க.,விடம் ஆறவில்லை.

வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தான், அதிக இடங்களில் வெற்றி பெறும். அ.தி.மு.க.,வுக்கு சமமாக, உள்ளாட்சி தேர்தல்களில், தி.மு.க., வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க,வை விட, தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; இதை காங்கிரஸ் மறந்து விடக்கூடாது. இத்தருணத்தில், 'தி.மு.க., வசம் உள்ள ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க மாட்டோம்' என, அமைச்சர் ஒருவர் சொல்கிறார். 'அடுத்த ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சிகளுக்கு, மூன்று மடங்கு நிதி ஒதுக்குவோம்' என, தி.மு.க., முன்னாள் செயலர் சொல்கிறார். இவர்கள் பேச்செல்லாம், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.

ஆளும் கட்சியாகட்டும், எதிர்க்கட்சியாகட்டும், இதுபோன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன், தி.மு.க., வுடன், காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடித்தது. தி.மு.க.,வுடன் சமரசத்திற்கு பின், 'இனி, பொது இடங்களில், மேடைகளில், தி.முக.,வை தாக்கிப் பேசுவதை தவிர்க்க வேண்டும்' என, காங்கிரஸ் தரப்பில் கூறி, பிரச்னைக்கு தீர்வு கண்டது; இது தான் காங்கிரசுக்கு நல்லது. கூட்டணி கட்சிகளான, தி.மு.க.,வும், காங்கிரசும் பொறுப்புடன் நடந்து கொண்டால், எதிர்காலத்தில், தி.மு.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
12-பிப்-202008:48:53 IST Report Abuse
venkat Iyer திருமதி பூங்கோதை அவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிலையை தெரிவித்தார். காங்கிரஸில் களம் இறங்கி வேலை செய்யும் தொண்டர்கள் மிகவும் குறைவு . மேடையில் உட்காருபவர்கள் அதிகம். அம்மா மேடையை தான் மட்டும் அலங்கரித்து அனைவரையும் தொண்டர்களாகவே அதிமுகவில் வைத்திருந்தார். அதில் கருணாநதியால்கூட முடியாததை இவர் சாதித்து வெற்றியும் கண்டார். காங்கிரசில் அழகிரி பேச்சுக்கோ, திமுகவில் ஸ்டாலின் பேச்சுக்கு முழு தொண்டர்களும் கட்டுப்பாட்டில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
12-பிப்-202008:33:53 IST Report Abuse
venkat Iyer திரு.வைகை வளவன் சினிமா நடிகர்களையும் தொழில்சாலைகளில் வரி ஏமாற்றுதலையும் ஒப்பீட்டு பேசுவது சரியில்லை என்று எனக்கு தோன்றுகிறது. விஜய் போன்ற ஸ்டார் வியாபார மார்க்கெட் கொண்டவர்கள் முதலீடு போடும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் நூறு சதவீத லாபத்தில் ஐம்பது சதவீதம் பங்கினை இவர்கள் கேட்டு ஒப்பந்தம் போடுவதுடன் அதில் இருபத்து ஐந்து சதவீதம் கருப்பு பணமாக மறைமுக ஒப்பந்தம் போடுகின்றனர்.இது போல நடிகர்கள் ரசிகர்களை மறைமுகமாக வைத்து படம் அதிக நாட்கள் ஓடுவது போலவும், ரசிகர்களை வைத்து நடிகர் அருமையாக நடித்துள்ளது போலவும் ஒரு செயற்கை தனத்தினை உருவாக்கி வைக்கின்றனர்.முதல்நாள் காட்சிகளை வைத்து விநியோகஸ்தர்கள் முடிவுக்கு வந்து தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்கும்போது அவர் நடிகருக்கு பாக்கி தொகையினை கொடுக்கின்றார்கள். இது இவர்களுக்கு தனிப்பட்ட லாபமாகும். தொழில்சாலை விஷயம் வேறு. தொழில்சாலை செயல்படுவதில் சீசனை பொருத்து லாப நஷ்டங்கள் ஏற்படுவதால் ஆடிட்டரை கொண்டு சராசரி அளவில் வரி விவரங்கள் தயாரிக்கப்படுகிறது.சில நிறுவனங்கள் போட்டியினால் லாபமே இல்லாமல் விற்பனை செய்தால் போதும் என்ற நிலையில் குறிப்பிட்ட ஜிஎஸ்டி வரியை மறைத்து லாபமாக எடுத்து கொள்கிறது அதாவது இன்வாய்ஸ் பில்லில் பொருளின் உண்மையான நிலையை குறைத்து அதற்குரிய ஜிஎஸ்டி வரியை கஸ்டமரிடம் குறைவான விலையில் பில் போட்டு அதில் கிடைக்கும் வரி லாபத்தினை எடுத்து கொள்வார்கள்.உண்மையில் பில்லில் உற்பத்தி செலவை விட குறைவாக போட்டு டெலிவரி பில்லாக அனுப்பி வைப்பார்கள். இது தொழில் நடத்த கொஞ்சம் உதவியாக இருக்கும். மொத்த உற்பத்தியை ஏமாற்றுதல் செய்ய முடியாது. எல்லாவற்றிர்க்கும் ஆவணம் இருக்கும். இதுவே பில்லில் நடிகர்கள் சம்பளம் காட்டுவது கிடையாது. தனது மார்கெட்டினை வைத்து இஷ்டத்துக்கு சம்பளம் வாங்குகிறார்கள். அதற்கு முறையாக வரியும் கட்டுவதில்லை. இது தனிப்பட்ட மனிதருக்கு செல்லும் வருமானமாகும். இவர்களால் பல தயாரிப்பாளர்கள் வளர்ந்தவர்களும் உண்டுஅதுபோல. நடுத்தெருவுக்கும் வந்துள்ளார்கள். ரஜினி தானாகவே சினிமாவை விட்டு விலகி வந்தால் அவருக்கு நல்லது. அவரது கெளரவம் பாதுகாக்கப்படும். ஏதோ தனது சம்பளத்தினை பாதியாக குறைந்துள்ளதாக தற்போது செய்தியில் படித்தேன். சினிமாதுறையில் அனைவரும் மாத சம்பளம் போல் வாங்கினால் சினிமா டிக்கெட் விலை குறைந்து மக்களும் தியேட்டர் நோக்கி வருவார்கள்.நடிகர்களின் சம்பளம் எழுபது சதவீதமாக இருப்பது மிகவும் ஆபத்தானத்கும்.இவர்கள் வரியை கட்ட சினிமா துறைக்கு தனி வரிகண்காணிப்பு ஒன்றை கூட மத்திய அரசு வைக்கலாம்.தொழில்சாலையில் லாபம் வந்தால் போனஸ் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அளிக்கின்றார்கள்.இங்கு நடிகர் டைரக்டர் இருவரே எல்லாத்தையும் அனுபவிக்கி ன்றார்கள்.காலம் எல்லாவற்றையும் மாற்றும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X