பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலெக்டர்களுடன் ஆலோசனை

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, 27 மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

மாநிலம் முழுவதும்தமிழகத்தில், 27 மாவட்டங்களில் மட்டும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. விடுபட்ட, ஒன்பது மாவட்டங்களில், தேர்தல் நடத்துவதற்கான, வார்டு மறுவரையறை பணிகள் நடந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, கலெக்டர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணியன் ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.

'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த ஆலோசனையில், 27 மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்காக, 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். உரிய காலத்திற்குள், வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்து, வெளியிட வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின், செலவு கணக்குகளை சரிபார்க்க வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்குகளுக்கு, நீதிமன்றத்தில் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

புள்ளி விபரம்மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில், தேர்தல் தொடர்பான புள்ளி விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X