பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பணிகளுக்கு நிலம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

சென்னை : 'தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த, கலெக்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை; சென்னை, மதுரவாயல் - துறைமுகம் மேம்பால சாலை; சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை உள்ளிட்டவை, இதில் அடக்கம். இந்த சாலை பணிகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளது. இதில், சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மற்ற பணிகளை தொடர, நிலம் கையகப்படுத்த வேண்டும்.

மாநில அரசு ஒத்துழைக்காததால், 4,000 கோடி மதிப்பிலான பணிகளை திரும்ப பெறுவதாக, சமீபத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.இது, பொது மக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியது. இத்திட்டங்களை திரும்ப செயல்படுத்துவது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள், டில்லி சென்று, பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினர். இதையடுத்து, திட்டத்தை தொடர, மத்திய அரசு முன்வந்துள்ளது. விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலைக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, மீண்டும் துவங்கியுள்ளது.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைப் பணிகள், அடுத்தடுத்து தொடரஉள்ளன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய, தமிழக பிரிவு திட்ட அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், பல்வேறு துறைகளின் செயலர்களுடன், தலைமை செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். சாலை பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறை செயலர்களுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X