அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய வளர்ச்சி திட்டம் அறிவிப்பதில் சிக்கல்!

Added : பிப் 11, 2020
Advertisement

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், அறிவிக்க வேண்டிய புதிய திட்டங்களை இறுதி செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த உள்ள, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், கவர்னர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் போன்ற நிலைகளில் வெளியிடப்படும்.

இதற்கான பணிகள், துறை வாரியாக நடந்து வருகின்றன.அந்த வகையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் அறிவிக்க வேண்டிய, புதிய திட்டங்கள் குறித்த பட்டியல் தயாரிப்பு பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர். வீட்டுவசதி வாரியம்சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., - வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் போன்றவற்றிடம், இதற்கான கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதேபோல, முந்தைய ஆண்டுகளில் வெளியான அறிவிப்புகளின் நிலை குறித்த விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

இதில், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., தொடர்பான பல அறிவிப்புகளில், எவ்வித முன்னேற்றமும் இல்லாதது, உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வேளச்சேரி பஸ் நிலையம், மறைமலை நகர் அருகே புதிய துணை நகரம், நகரமைப்பு வல்லுனர் பணி அமைப்பு விதிகள் போன்றவை, சட்டசபையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டன.அதிகாரிகள் அறிவுத்தல் இந்த அறிவிப்புகள், செயல்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டன.

இதேபோன்ற, நடைமுறை சாத்தியம் இல்லாத அறிவிப்புகளை, பரிந்துரைக்க வேண்டாம் என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதனால், புதிய கருத்துரு அடிப்படையில், திட்டங்களை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து பிரிவு உயரதிகாரிகளும், தலைமை செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
-- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X