சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி உரிமையாளர் தற்கொலை விவகாரம் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை : லாரி உரிமையாளரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, சென்னமலை கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் அருகனி. இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:என் கணவருக்கு சொந்தமான லாரியை, இரண்டு பேர் வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தனர். மாத தவணைஅவர்கள் வாடகையை சரியாக கொடுக்காததால், என் கணவரால், லாரிக்கான மாத தவணையை முறையாக செலுத்த முடியவில்லை.இதற்கிடையே, லாரி கடத்தப்பட்டது.

லாரியை மீட்டு தரக்கோரி, 2012ல், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம், என் கணவர் புகார் அளித்தார். லாரியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாத தவணையை செலுத்தாததால், நிதி நிறுவனம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதனால், மனமுடைந்த என் கணவர், தற்கொலை செய்து கொண்டார். 'என் தற்கொலைக்கு, லாரியை வாடகைக்கு ஓட்டி வந்த இருவர் தான் காரணம்' என, கடிதம் எழுதி வைத்துஇருந்தார். ஆனால், போலீசார் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைஇந்த வழக்கில், நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவு:தன் மரணத்திற்கு யார் காரணம் என, மனுதாரர் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தவில்லை. இது, மனித உரிமை மீறல் மட்டுமின்றி, போலீசார் தங்களது கடமையில் இருந்தும் தவறியுள்ளனர்.எனவே, இன்ஸ்பெக்டர் சிவகுமார் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப சூழ்நிலை கருதி, அவரது குடும்பத்தினருக்கு, 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக, அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X