அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொடர்பு எல்லைக்கு அப்பால் கரூர் காங்., பெண் எம்.பி.,

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கரூர் : 'வாக்காளர்கள் தொடர்பு கொள்ள முடியாத கரூர், காங்., - எம்.பி., மீது வழக்கு தொடரப்படும்' என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில், காங்., பெண் பிரமுகர் ஜோதிமணி, 45, போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு, அரவக்குறிச்சியில் மட்டும் அலுவலகம் உள்ளது. கரூர் உட்பட ஐந்து சட்டசபை தொகுதிகளில், அலுவலகம் இல்லை.பொதுமக்கள், ஜோதிமணியை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். மொபைல் போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர், சமூக வலைதளங்களில், 'கரூர் எம்.பி., ஜோதிமணிக்கு திறந்த மடல்' எழுதியுள்ளார்.அதில், 'அம்மா, நீங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு, உங்களை தொடர்பு கொள்ள எந்த வாய்ப்பையும் தருவதில்லை.

'பொதுமக்கள், உங்களை அணுகாதவாறு தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தால், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்து, தேவையான உத்தரவுகளை பெற வேண்டிய நிலைக்கு, எங்களைப் போன்றோர் தள்ளப்படுவர்' எனக் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
12-பிப்-202017:32:25 IST Report Abuse
Baskar இவரை தேர்ந்தெடுத்த உங்களை தான் காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X