டில்லி மக்கள் பதிலடி

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 டில்லி மக்கள் பதிலடி

கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ.,வை மக்கள் நிராகரித்து விட்டனர். வளர்ச்சி வெற்றிபெற்றுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை, மக்கள் நிராகரித்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டமாணவர்கள், பெண்கள் மீதுதாக்குதல் நடத்தியதற்காக, பா.ஜ.,வுக்கு, டில்லி மக்கள் சரியானபதிலடி கொடுத்து உள்ளனர்.
- மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
பொய்க்கு கிடைத்த தோல்வி ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பொய் மற்றும் வெற்று கோஷம் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள்,டில்லியில் வசிக்கின்றனர்.இவர்கள், பா.ஜ.,வின் பிரிவினைவாத திட்டங்களை தோற்கடித்துள்ளனர். இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை தேர்தல்களின்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக, டில்லி முடிவு அமைந்துள்ளது.
- ப.சிதம்பரம்மூத்த தலைவர், காங்.,
ஏற்கனவே தெரிந்தது தான் டில்லியில், காங்கிரஸ் படுதோல்விஅடையும் என்பது தெரிந்தது தான். ஆனால், அபார வெற்றிபெறுவோம் என கூறிய பா.ஜ.,வுக்கு என்ன ஆனது.மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது, பிரதமர் மோடியின் செயல்பாட்டில்திருப்தியடைந்திருந்தால், டில்லிமக்கள், பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போட்டிருப்பார்கள். மத்திய அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதை, டில்லிசட்டசபை தேர்தல் முடிவு, எடுத்துக் காட்டி உள்ளது.
- கமல்நாத் , மத்திய பிரதேச முதல்வர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-பிப்-202013:13:49 IST Report Abuse
Sampath Kumar உண்மை நிலை இது தான் இதை பிஜேபி உணரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X