ஜாமியா பல்கலை., வன்முறை வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

Added : பிப் 11, 2020
Advertisement

புதுடில்லி : ஜாமியா பல்கலை.,யில் நடந்த வன்முறை குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என, வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனு தொடர்பாக பதில் அளிக்க, மத்திய அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கடந்த ஆண்டு, டிச.,15ல், டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல்துறையினர் மீது கற்களை வீசியதுடன், அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்; இதில், மாணவர்கள் பலர்காயமடைந்தனர்.
போலீசார் நடத்திய தாக்குதலில், ஒரு கண்ணில் பார்வையை இழந்த, ஜாமியா பல்கலை மாணவர், எம்.டி.மின்ஹாஜுதீன், டில்லி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன் மனுவில், 'ஜாமியா வன்முறை தொடர்பாக, நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்; தாக்குதல் நடத்திய போலீசார் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும்; என் சிகிச்சை செலவுகளை அரசு ஏற்பதுடன், கல்வித்தகுதி அடிப்படையில், எனக்கு நிரந்தர அரசுப்பணி வழங்க வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் போலீசார் ஆகியோருக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X