பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரி ; விசாரணைக்கு ராணுவ அமைச்சர் உத்தரவு| Dinamalar

பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரி ; விசாரணைக்கு ராணுவ அமைச்சர் உத்தரவு

Added : பிப் 11, 2020
Share

புதுடில்லி : ஆபாச, 'வீடியோ' சர்ச்சையில் சிக்கிய ராணுவ அதிகாரிக்கு எதிரான விசாரணைக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், அபோகர் ராணுவ முகாமில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், அங்கு பணியாற்றிய பெண் ஊழியருடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோவை, ராணுவ வீரர்கள் இருவர், சில மாதங்களுக்கு முன் வெளியிட்டனர். தற்போது அந்த அதிகாரி ஓய்வு பெற்ற நிலையில், அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சி உண்மையா என்பது குறித்தும், அந்த அதிகாரியின் நடத்தை தொடர்பாக விசாரணை நடத்தும்படியும், ராணுவ அதிகாரிகளுக்கு, அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ராணுவ நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை நடக்கவுள்ளது. இதற்கு இடையே, வீடியோவை வெளியிட்ட ராணுவ வீரர்கள் இருவரும், தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துஉள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X