'பிரதமருக்கு மட்டும் தான் சிறப்பு பாதுகாப்பு படை'

Added : பிப் 11, 2020
Advertisement

புதுடில்லி : ''பிரதமருக்கு மட்டும் தான், 'எஸ்.பி.ஜி.,' எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது,'' என, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:சமீபத்திய சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்தத்தின்படி, பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டும், சிறப்பு பாதுகாப்பு படை, பாதுகாப்பு வழங்குகிறது. அதுபோல, முன்னாள் பிரதமருக்கு, அவர் பதவியில் இருந்து விலகிய நாள் முதல், ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பில், முன்னாள் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும், குடும்பத்தாரும் அடங்குவர். இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த, 2014 முதல் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டோரின் விபரங்கள் தொடர்பான கேள்விக்கு, கிஷன் ரெட்டி, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, பதிலளிக்க மறுத்துவிட்டார். ''உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, மத்திய புலனாய்வு அமைப்பு கருதும் நபருக்குத் தான், பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதுகூட, குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பை தொடர்வதா அல்லது மாற்றி அமைப்பதா என, முடிவு செய்யப்படுகிறது,'' என, கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மத்திய அரசு, சமீபத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவர் மனைவி குருஷரன் சிங், காங்., தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு பாதுகாப்பு படையை விலக்கிக் கொண்டது. அதற்கு பதிலாக, மத்திய ரிசர்வ் போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X