அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் மண்டல அறிவிப்பில் அரசியல் லாபம் அடைய போட்டி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (10)
Advertisement
dmk,admk,திமுக,அதிமுக

'காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்' என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை மையமாக வைத்து, அரசியல் லாபம் அடைய, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும், போட்டா போட்டியில் இறங்கிஉள்ளன.

சில தினங்களுக்கு முன், தமிழக முதல்வர் ஈ.பி.எஸ்., 'காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்' என, அறிவித்தார். இதை, எதிர்க்கட்சியான தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில்லை. தமிழக அரசியலில், முக்கிய திருப்புமுனையாக கருதப்படும், இந்த அறிவிப்பு குறித்து, மத்திய அரசிடம் தெரிவிக்க, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நேற்றுமுன்தினம் டில்லி வந்திருந்தார்.


அரசியல் லாபம்:

இது குறித்த மத்திய அரசின் பதில், எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பிரச்னையில் அமைதி காத்து வந்த, தி.மு.க., இப்போது, தங்களுக்கான அரசியல் லாபத்தைப் பெற முயற்சிக்கிறது. இதற்காக, பார்லி.,யின் இரு அவைகளிலும், இது குறித்து விவாதிக்க, தி.மு.க.,சார்பில், 'நோட்டீஸ்' தரப்பட்டது.

நேற்று ராஜ்யசபா கூடியதும், திருச்சி சிவா, இதுகுறித்து வலியுறுத்தினார். ஆனால், சபைத் தலைவர் வெங்கையாநாயுடு, ''பட்ஜெட் விவாதத்தைத் தவிர வேறு எந்த அலுவல்களும் கிடையாது,'' என மறுக்கவே, தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின், தி.மு.க., -எம்.பி., திருச்சி சிவா கூறியதாவது: தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என, தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அறிவிப்பு அவருடையதாக இருந்தாலும், அதை ஏற்று செயல்படுத்திய வேண்டிய அதிகாரம், மத்திய அரசிடம் உள்ளது.

முதற்கட்டமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், எந்தவொரு தொழிற்சாலைகளும் வரக்கூடாது. எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கான ஆய்வுகள் நடத்தக்கூடாது. இதில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன... சில தனியார் நிறுவனங்களுக்கு, எண்ணெய் எடுக்க தரப்பட்டிருக்கும் அனுமதி ரத்து செய்யப்படுமா...


குரல் எழுப்பினோம்:

இவற்றுக்கெல்லாம், மத்திய அரசின் பதில் என்ன என்பது குறித்துதான், பார்லிமென்ட்டில் குரல் எழுப்பினோம். ஆனால், மத்திய அரசு, எந்த பதிலையும் தர மறுத்துவிட்டது. பார்லிமென்ட்டில், எதிர்க்கட்சியினரின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பார்லிமென்ட்டில்தான் பிரச்னைகளை எழுப்ப முடியும். இவ்வாறு, சிவா கூறினார்.

இதேபிரச்னைக்காக, லோக்சபாவிலும், தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். வேளாண் மண்டலம் குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, மத்திய அரசு தரப்போகும் பதில் என்னவாக இருந்தாலும், இவ்விஷயம் தொடர்பாக, டில்லியில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தங்கள் பங்கைப் பெற தீவிரம் காட்டத் துவங்கியுள்ளன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravindran - Vellore,இந்தியா
12-பிப்-202015:09:33 IST Report Abuse
Ravindran Mr. Anbu, super imagination.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202013:38:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரு ஆணியும் பிடிங்கமுடியவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக திமுக MP கள் ராஜினாமா செய்துவிட்டு வந்து விட வேண்டும். வெட்டியாக வெளிநடப்பு செய்தோம் என்று சொல்வது வெட்கக்கேடான செயல்
Rate this:
Share this comment
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
12-பிப்-202012:50:57 IST Report Abuse
Santhosh Gopal என்ன பண்ணாலும், அதிமுக தான் இதை நிறைவேற்றும். இதன் மொத்த பெருமையும் எடப்பாடிக்கே.. சும்மா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துவிட்டால் மக்களுக்கு தெரியாதா? எடப்பாடி அறிவித்த பிறகு தான் இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என்று? எடப்பாடி தான் சேலம் மாநாட்டில் சொல்லிவிட்டாரே, மீத்தேன் கை எழுத்து போட்டது திமுக தான் என்று...இணையத்தளத்தில் ஒரு காணொளி உலவுகிறது. TR பாலு பேட்டியில் நானும் இன்னொருவரும் சேர்ந்து தான் இந்த திட்டத்தை தஞ்சைக்கு கொண்டு வந்தோம் என்று? ஏன் சுடலையே நாங்கள் ஆய்வுக்கு தான் கை எழுத்து போட்டோம் என்று ஒப்பு கொண்டு விட்டார். அதாவது பாருங்க மக்களே, இந்த திட்டம் ஆபத்து என்று இப்போது கூறும் சுடலை, ஆபத்தான ஒரு பொருளை எடுக்க ஏன் ஆய்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும்? அதே போல ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களே இந்த திமுக தான். எடப்பாடி சட்டமன்றத்தில் கூறினார். இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலா சட்டம் நிறைவேறினால், முழுக்க முழுக்க எடப்பாடி தான் காரணம். இவர்கள் பாராளுமன்றத்தில் நடித்துவிட்டால் இவர்கள் காரணம் ஆகாது. இன்னொன்று முக்கியம், திமுகவினர் மூக்கை நுழைக்கும் எதுவும் நிறைவேறியதாக சரித்திரமே இல்லை. இவர்கள் மூக்கை நுழைத்து, அந்த பெருமையை இவர்கள் எடுக்க, பாராளுமன்றத்தில் கலாட்டாவில் ஈடுபட்டால், மத்திய அரசு இதற்கு நேர்மாறாக யோசிக்கும். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் கூட போகலாம். இந்த சட்டத்தை வரவிடாமல் கெடுப்பது தான் சுடலையின் என்னமா? மறுபடியும் கூறுகிறேன், இந்த சட்டம் தமிழக கொள்கைக்கு உட்பட்டது, அதனால் கவர்னர் கை எழுத்து போட்டாலே சட்டம் நிறைவேறிடும். ஆனால் இவர்கள் neet தேர்வை சமபந்தி படுத்தி, இந்த சட்டத்திற்கு neet தேர்வை போல மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காது என்கிறார்கள்.. அடேய்களா, நீட் தேர்வு இந்தியா முழுவதும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒன்று, அதனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது, அப்படி ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளித்தால் மற்ற மாநிலங்களும் விலக்கு கேட்கும், ஆகையால் தமிழிகம் நிறைவேற்றிய சட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது ஆனால் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலம் சட்டம் என்பது தமிழகத்தை சார்ந்தது, நீட் சட்டம் வேறு, இந்த சட்டம் வேறு.. இந்த சட்டம் ஜனாதிபதிக்கு ஒப்புதல் தேவை இல்லை. கவர்னர் மட்டும் ஒப்புதல் கொடுத்தாலே போதுமானது. ஆனால் திமுகவினரை கேட்பது ஒன்றே தான், தமிழக அக்கரையில், குறிப்பாக டெல்டா மாவட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால் அமைதியாக இருந்தாலே போதும், அதுவே தானாக நடக்கும். சும்மா இந்த சட்டத்திற்கு நாங்களும் காரணம் என்று காட்டிக்கொள்ள, பிரச்னையை ஏற்படுத்தி கெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். திமுக வால் தமிழனுக்கு நன்மை ஏற்பட்டதாக சரித்திரமே இல்லை..... கெடுதல்கள் ஏற்பட்டதாக தான் சரித்திரம் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X