அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது ; தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement
முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது ;  தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை : ''ஏப்ரல் மாதத்துக்கு முன், மாணவர் சேர்க்கையை நடத்தினால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

பள்ளி மாணவர்களை, உடல் ஆரோக்கியம் மற்றும் நல்லொழுக்கம் உள்ளவர்களாக உருவாக்கும் வகையில், 'மலரும் நல்வாழ்வு' என்ற, புதிய பயிற்சி திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம், 'யுனெஸ்கோ' மற்றும் மத்திய அரசின், 'சமக்ர சிக் ஷா' என்ற, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், துவக்கப் பட்டுள்ளது. இதற்காக, சிறப்பு பாட திட்டமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 12 அம்சங்களாக பாடங்கள் நடத்தப்பட உள்ளன. சென்னையில், இந்த புதிய திட்டத்தை துவக்கி வைத்த, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''கல்வி தரத்தில், குஜராத்தை மிஞ்சி தமிழகம் உயர்ந்த இடத்தை எட்டும். மனித நேயமும், எதையும் சமாளிக்கும் பக்குவத்தையும், தமிழக மாணவர்களிடம் வளர்க்க, இந்த புதிய பயிற்சி திட்டம் உதவும்,'' என்றார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களின் இடைநிற்றல் தொடர்பாக, பார்லிமென்டில் வழங்கப்பட்ட புள்ளி விபரங்களை, தமிழக அரசு வழங்கிய புள்ளி விபரங்களுடன் ஆய்வு செய்கிறோம்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஏப்ரல் மாதத்திற்கு பிறகே, மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். முன்கூட்டியே விளம்பர தட்டிகள் வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினால், அந்த பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் சேர்க்கைக்காக, நன்கொடை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, பெற்றோர் தைரியமாக புகார் தர வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் டியூஷன் மையங்களை, அரசு கண்காணித்து வருகிறது.உரிய அனுமதி பெற்ற பிறகே, டியூஷன் மையங்களை நடத்த வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார். நிகழ்ச்சியில், பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலர் தீரஜ்குமார், பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா ஆகியோர் பங்கேற்றனர்.

'பயிற்சி கையேடு தர திட்டம்'அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த பாட திட்டம், பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் பங்கேற்பவர்களும், தமிழக பாட புத்தகங்களை வைத்து பயிற்சி எடுக்கின்றனர். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை, தமிழக பாட நுால் கழகம் விற்பனை செய்யும். புதிய பாட திட்ட புத்தகங்களை எளிமையாக படிக்கும் வகையில், பயிற்சி கையேடுகளை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, பாட திட்டத்தை விரிவாக ஆய்வு செய்வதற்கு பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைப்படி பயிற்சி கையேடு வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X