பேரறிவாளன் விடுதலையில் தமிழக கவர்னர் நிலை என்ன?

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 பேரறிவாளன் விடுதலையில் தமிழக கவர்னர் நிலை என்ன?

புதுடில்லி : ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில், கவர்னர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதை கேட்டுச் சொல்லும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறி வாளன், தன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி, உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்துஉள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எடுத்துள்ள சட்டப்பூர்வமான நடவடிக்கை குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில்ஆஜரான வழக்கறிஞர்கூறியதாவது:பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அது தொடர்பான கோப்பு, தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, கவர்னர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கும்படி, கவர்னரிடம் மாநில அரசு அழுத்தம் கொடுக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இந்த விவகாரத்தில், கவர்னரிடம், நீதிமன்றம் நேரடியாக கேள்வி எழுப்ப முடியாது. கவர்னர் என்பவர், மாநில அரசின் பிரதி நிதி.எனவே, மாநில அரசு தரப்பில், கவர்னரை அணுகி, சட்டசபை தீர்மானம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என கேட்கலாம். கவர்னர் கூறும் தகவல்களை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-பிப்-202015:04:10 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கொலைகாரர்களை உடனடியாக தூக்கிலிட்டால் பிரச்சினை முடிந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X