கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சமூக நலத்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை, சாலையோரங்களில் வசிப்போருக்கு, தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில், சமூக நலத்துறை செயலர் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் தாக்கல் செய்த மனு:டிசம்பர், ஜனவரியில், கடும் பனிப்பொழிவு நிலவும். அப்போது, சாலை ஓரங்களில் வசிக்கும், வீடு இல்லாத மக்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு, தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்தி தர, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டது.இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, சமூக நலத்துறை செயலர் மதுமதி சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விபரம்: ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் தங்குவதற்கான வசதிகளை, சமூக நலத்துறை செய்து வருகிறது. குடும்பத்தை பிரிந்து, வேறு பகுதிகளில் வேலை செய்யும் பெண்கள், பாதுகாப்பாக தங்க, தனி விடுதியும் நடத்தப்படுகிறது.சிறார் சீர்திருத்த சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள, 1,112 குழந்தைகள் காப்பகங்களை, சமூக நலத்துறை கண்காணித்து வருகிறது; 36 காப்பகங்களை, அரசு நேரடியாக நடத்துகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதைப் படித்த நீதிபதிகள், 'அறிக்கையில் முழு விபரங்கள் இல்லை' என, அதிருப்தி தெரிவித்தனர்.

மார்ச், 11ம் தேதி, முழு விபரங்கள் அடங்கிய, கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்யும்படியும், அப்போது, சமூக நலத்துறை செயலர் நேரில் ஆஜராகும் படியும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X