சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

அமெரிக்காவிலிருந்து ஈரோட்டில் விவசாயம் செய்கிறேன்!

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (4)
Advertisement
அமெரிக்காவிலிருந்து ஈரோட்டில் விவசாயம் செய்கிறேன்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அமெரிக்காவில் பணியாற்றியபடி, ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும், வேளாண் பொறியியல் பட்டதாரி ஜேக்கப் சத்தியசீலன்: எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆசிரியர்கள். எனினும், தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

அதன்படி எனக்கும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை, ரொம்ப காலமாக இருந்தது. மலர்களை பயிரிட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என நினைத்து, ஏலகிரி, நீலகிரி, குன்னுார், கோத்தகிரி போன்ற மலைப்பாங்கான இடங்களில் நிலத்தை தேடினேன்; கிடைக்கவில்லை. ஈரோடு அருகே, தாளவாடி பகுதியில் தான், 9 ஏக்கர் கிடைத்தது. அதில், பணியாளர் களை வைத்து, விவசாயம் செய்கிறேன். இந்த நிலத்தை வாங்கியதும் மனம் மாறி விட்டது. 'இன்று அனைவரிடமும் பணம் இருக்கிறது.

'ஆனால், நச்சான உணவுகளைத் தான் சாப்பிட்டு, நோய்வாய் படுகிறோம். அதற்கு மாறாக, சத்தான, நச்சில்லாத உணவு தானியங்களை பயிரிடுவோமே...' என, முடிவு செய்தேன். அதனால், பூக்கள் ஏற்றுமதி தொழிலை மறந்தேன். நிலத்தை சமன்படுத்தி, வேலி போட்டு, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, யானை போன்ற காட்டு விலங்குகள் உள்ளே வராமல் இருக்க, தொங்கும் மின் வேலிகள் அமைத்து, 'பக்கா'வாக, விவசாய பணிகளில் ஈடுபட்டேன்.

மாதுளை, கொய்யா, பப்பாளி, முருங்கை, அத்தி போன்ற மரங்களை, வேலி ஓரங்களில் வைத்தேன். 30 பாக்கு மரங்கள், 30 தென்னை மரங்கள், 100 வாழைகள் உள்ளன. இத்துடன், 100 நாட்டுக்கோழிகள், மூன்று நாட்டு மாடுகள், ஏழு வட மாநில மாடுகளுடன், ஒரு காளையும் உள்ளது. பண்ணையிலேயே தங்கி, முழு நேரமும் விவசாயத்தை கவனித்துக் கொள்ள, மணி முத்து - அம்பிகான்னு ஒரு தம்பதி இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுடன் அவர்கள், அங்கேயே தங்கியிருந்து, பண்ணையை கவனித்துக் கொள்கின்றனர்.

நானும், அமெரிக்காவில் இருந்தபடி, 24 மணி நேரமும், கண்காணிப்பு கேமரா மூலம் பண்ணையை கண்காணித்தபடியே உள்ளேன். மணிமுத்து தம்பதிக்கு, 'ஸ்மார்ட் போன்' வாங்கிக் கொடுத்துள்ளேன். நோய் அல்லது விளைச்சல் குறித்து, எனக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் படம் அனுப்புவர்; வீடியோ கால் அழைப்பிலும் வருவர்; ஆலோசனைகளை வழங்குவேன். அவ்வப்போது இங்கு வந்து, விவசாயத்தை பார்வையிட்டு, திரும்பிச் செல்கிறேன். இன்னும், ஐந்தாண்டுகளுக்கு அமெரிக்காவில் இருப்பேன். அதன்பின், குடும்பத்துடன் நாடு திரும்பி, முழு அளவில் விவசாயத்தில் ஈடுபட போகிறேன்; பலருக்கு வழிகாட்டியாகவும் மாற உள்ளேன்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar N - Erode,இந்தியா
12-பிப்-202011:54:39 IST Report Abuse
Sekar N சத்தியசீலன் உங்களது போன் நம்பர் மற்றும் இ மெயில் முகவரி தெரிவிக்கவும். Mine e-mail id: nlsekar@yahoo.com
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
12-பிப்-202008:43:38 IST Report Abuse
Ajaykumar அருமை, நம்பர் கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12-பிப்-202008:23:38 IST Report Abuse
கல்யாணராமன் சு. தங்களது முயற்சிகள், எண்ணங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X