பொது செய்தி

தமிழ்நாடு

முதலீட்டை ஈர்ப்பதில் விரைவில் தமிழகம் 2ம் இடம்

Added : பிப் 11, 2020
Advertisement
 முதலீட்டை ஈர்ப்பதில் விரைவில் தமிழகம் 2ம் இடம்

சென்னை : ''அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில், நான்காம் இடத்தில் உள்ள தமிழகம், அடுத்த ஆண்டு, இரண்டாமிடத்திற்கு வந்து விடும்,'' என, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து துவக்கியுள்ள, 'ஜெம்' என்ற, அரசு இ - வலைதள சந்தையில், தமிழக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை பங்கேற்க வைப்பதற்காக, 'ஜெம் சம்வாத்' என்ற தலைப்பில், சென்னையில், நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.துவக்க விழாவில், அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:ஒளிவு மறைவற்ற விற்பனைக்கு, அரசு இ - வலைதள சந்தை உதவும். மாநிலத்தில் அரசு நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய, இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றன.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், 50 லட்சம் உள்ளன. ஆனால், 3,000 நிறுவனங்கள் மட்டுமே சேர்ந்துள்ளன. அனைத்து நிறுவனங்களும், இந்த இணையதள சந்தையை பயன்படுத்த வேண்டும்.தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாநிலமாக, தமிழகம் உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில், நான்காமிடத்தில் உள்ளோம். அடுத்த ஆண்டு, இரண்டாமிடத்திற்கு வந்து விடுவோம். தமிழகத்தில், தொழில் வழித்தடம் அறிவித்துள்ளோம். இதை மேம்படுத்த, தனிப்பிரிவு துவக்க, தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு, அவர் பேசினார். ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், ''அரசு மின்னணு சந்தையில், இந்திய அளவில், 3,26 லட்சம் விற்பனையாளர்கள், 18.63 லட்சம் பொருட்களை, விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில், 50 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருந்தாலும், 2,985 நிறுவனங்கள் மட்டுமே, ஜெம் இணையதளம் வழியே, வர்த்தகம் செய்கின்றன; மற்ற நிறுவனங்களும் இணைய வேண்டும்,'' என்றார்.இவ்விழாவில், தொழில் துறை செயலர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார் பங்கேற்றனர்.

'பெட்ரோ கெமிக்கல் ஆலையால் பாதிப்பில்லை'''கடலுார் மாவட்டத்தில் அமைய உள்ள, பெட்ரோ கெமிக்கல் ஆலையால், விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்தப்பகுதி வளர்ச்சி பெறும்,'' என, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:கடலுார் மாவட்டத்தில், 2007ல் இருந்து, பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு ஆலை, 2,200 ஏக்கரில் உள்ளது. தற்போது, 'ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்' நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாயில், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க உள்ளது.

இதனால், வேளாண் தொழில் பாதிக்கப்படாது. இதை, மக்களிடம் எடுத்துரைப்போம். இந்த ஆலை வந்தால், 5,000 பேருக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேருக்கு, மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்; அந்தப் பகுதி வளர்ச்சி பெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X