மாணவியர் பலாத்கார வழக்கு | Dinamalar

மாணவியர் பலாத்கார வழக்கு

Added : பிப் 11, 2020
Share

புதுடில்லி : பீஹார் மாநிலம், முசாபர்புரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவியர் பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் தாக்குரை, சாகும் வரை சிறையில் அடைக்க, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள முசாபர்புரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவியர், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டனர். டாடா சமூக அறிவியல் மையம் நடத்திய விசாரணையில், இது தெரிய வந்தது. இது தொடர்பாக, அந்த அமைப்பு, மாநில அரசுக்கு, 2018ல் அறிக்கை தாக்கல் செய்தது.பெரும் அதிர்வலைஇந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநில அமைச்சராக இருந்த, மஞ்சு வர்மாவின் கணவருக்கும், இந்த இல்லத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாக்குருக்கும் இடையே தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்தும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் மஞ்சு வர்மா நீக்கப்பட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், முசாபர்புர் நீதிமன்றத்தில் இருந்து, டில்லியில் உள்ள, 'போக்சோ' சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 'பிரஜேஷ் தாக்குர் உட்பட, 19 பேர் குற்றவாளிகள்' என, ஜன., 20ல் அறிவித்தது.


தண்டனை விபரம்


அவர்களுக்கான தண்டனை தொடர்பான வாதங்கள் நடந்து வந்தன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.அதன்படி, பிரஜேஷ் தாக்குரை, சாகும் வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, மேலும், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X