கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் ; 'கொரோனா வைரஸ்' பாதிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை : 'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, 2018ல், வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கை, டெங்கு உயிரிழப்பு போன்றவை குறித்து, சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.இந்நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், 'டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில், 2,075 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நாள்தோறும், 70 முதல், 80 வீடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், ஆண்டுதோறும் மே முதல் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன' என்றார்.அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த கூடுதல் மனு:'கொரோனா வைரஸ்' தாக்குதலை தடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.தலைமை செயலர் தலைமையில், சுகாதாரம், போக்குவரத்து, நுகர்பொருள் வழங்கல் உள்ளிட்ட துறை செயலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, இந்த வைரஸ் குறித்து, மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, 'டெங்கு, கொரோனா போன்ற நோய் பரப்பும் வைரஸ்களை தடுக்க, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இரண்டு வாரத்தில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X