தூக்கிலிட புதிய தேதி பெற திஹார் நிர்வாகத்துக்கு அனுமதி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (12)
Advertisement
nirbhaya,Delhi_gang_rape,hang,SC,SupremeCourt,nirbhaya_case,நிர்பயா,தூக்கு,சுப்ரீம்கோர்ட்,உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை, டில்லி திஹார் சிறை நிர்வாகம், விசாரணை நீதிமன்றத்தை அணுகி பெறலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, 'நிர்பயா' 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் முகேஷ் குமார், பவன் குப்தா, வினய், அக் ஷய் ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


சிக்கல்:

டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல் காரணமாக தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. மறுசீராய்வு மனு, கருணை மனு என, குற்றவாளிகள் நான்கு பேரும் மாறி மாறி மனுதாக்கல் செய்வதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றவாளிகள் நான்கு பேருக்கும், ஒரே நேரத்தில் துாக்கு தண்டனையை நிறைவேற்றாமல், தனித் தனியாக நிறைவேற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நான்கு குற்றவாளிகளுக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, மத்திய அரசு மற்றும் டில்லி மாநில அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி, ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


'நோட்டீஸ்'

மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''குற்றவாளிகளை துாக்கிலிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் அல்ல; அதற்காக, துாக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்கவில்லை. ''நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அனுமதி கேட்கிறோம்,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: துாக்கு தண்டனையை தாமதமின்றி நிறைவேற்றுவது குறித்து, மத்திய - மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக, குற்றவாளிகள் நான்கு பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும், துாக்கு தண்டனையை நிறைவேற்ற, புதிய தேதிக்கான, 'வாரன்ட்' பிறப்பிக்கும்படி, அரசு தரப்பு, விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


குற்றவாளி மீண்டும் மனு:

குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் நிராகரித்தார். இதை எதிர்த்து, வினய் சர்மா சார்பில், அவரது வழக்கறிஞர், ஏ.பி.சிங், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். மேலும், வினய் சர்மாவின் துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படியும், அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டால், துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது, மேலும் தாமதமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, குற்றவாளிகளுக்கான தண்டனையை விரைவில் நிறைவேற்றக்கோரி, நிர்பயாவின் பெற்றோர் சார்பில், டில்லி விசாரணை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-பிப்-202016:57:16 IST Report Abuse
Endrum Indian என்னா ட்ராமா தாங்கலைடா சாமி . குற்றம் கைது தீர்ப்பு தண்டனை நிறைவேற்றம் இவை அனைத்தும் 7 நாட்களில் நிறைவேற்றப்படவேண்டும் 7 வருடங்கள் ஆன பின்னும் இந்த மாதிரி குட்டையை குழப்பிக்கொண்டிருக்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
12-பிப்-202014:28:42 IST Report Abuse
blocked user அநீதித்துறை மிக மிக கேவலமாக நடந்து கொள்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Tamil - chennai,இந்தியா
12-பிப்-202012:17:36 IST Report Abuse
Tamil தர்மம் நீதி ஞாயம் எல்லாம் கேட்டு போறது வேஸ்ட் 95 % களவாணி தான் இருக்கான் இவனுக வச்சிருக்கிற சொத்துக்களை வெளிநாட்டு மீடியா லீக் செய்தல் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X