சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேலும் ஒரு வி.ஏ.ஓ., கைது சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிரடி

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : மாவட்டத்திற்கு ஒரு முகவரை நியமித்து, வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடுகள் வழக்கில் கைதாகியுள்ள, இடைத்தரகர் ஜெயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4, குரூப் - 2 ஏ' மற்றும் வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த, இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட, 40 பேரை, ஏற்கனவே கைது செய்துள்ளனர். இவர்களில், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர் ஓம்காந்தன் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை, காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.

அதில் கிடைத்த தகவல்படி, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, விஜயாபதியை சேர்ந்த சுயம்புராஜன், 29 என்பவரை, நேற்று கைது செய்தனர்.இவர், 2016ல் நடந்த, வி.ஏ.ஓ., தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம், இளையாங்குடி மையத்தில் தேர்வு எழுதி, முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு, ஜெயகுமாரிடம், 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்,தற்போது, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, புன்னப்பாக்கம் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார். இவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசாரிடம், ஜெயகுமார் அளித்துள்ள வாக்குமூலம்:நான், 10 ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக, சென்னையில், 'ஆல் சக்சஸ்' என்ற, பயிற்சி மையத்தை நடத்தி வந்தேன். எனக்கு பக்கபலமாக, சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த, டி.என்.பி.எஸ்.சி., ஊழியர் ஓம்காந்தன் இருந்தார்.எங்களுக்கு பின்னால், மேலும் பல முக்கிய புள்ளிகள் உள்ளனர். அவர்கள் துணையுடன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் முறைகேடு செய்து, 23 வகையான, அரசு பணிகளை விற்றுள்ளோம்.

இதற்காக, 10 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளோம். டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி மையங்கள் வாயிலாக, தேர்வர்களுக்கு வலை விரித்தோம். அதற்காக, 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' போல, மாவட்டத்திற்கு ஒரு முகவரை நியமித்து, முறைகேடில் ஈடுபட்டோம். எங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, ராமேஸ்வரம் மற்றும் இளையாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, சில முக்கிய அரசு அதிகாரிகளும் உறுதுணையாக இருந்தனர். இவ்வாறு, ஜெயகுமார் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-பிப்-202014:37:11 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் வேலைக்கு சேர்ந்த கிராம அதிகாரிகளை சோதித்தால் நிறைய மட்டுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X